SK23 movie: துப்பாக்கி படத்தோட மேஜிக்.. சிவகார்த்திகேயனுடன் கூட்டணி குறித்து பேசிய வில்லன் நடிகர்!

சென்னை: சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் எஸ்கே 23 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் தன்னுடைய கேரக்டர் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

முன்னதாக விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி படத்தில் அதிரடி யாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த வித்யுத், தற்போது நீண்ட காலங்களுக்கு பிறகு ஏஆர் முருகதாசுடன் மீண்டும் இணைந்துள்ளார். துப்பாக்கி படத்தில் செய்திருந்த மேஜிக்கை மீண்டும் செய்ய ஏஆர் முருகதாஸ் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக வித்யுத் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan AR Murugadoss Vidyut Jammwal tamil cinema

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாசுடன் தன்னுடைய எஸ்கே 23 படத்திற்காக இணைந்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட அடுத்தடுத்த இடங்களில் நடந்துள்ளன. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார். இதேபோல வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்து வருகிறார். அதிகமான ஆக்சன் காட்சிகளுடன் படத்தை ஏஆர் முருகதாஸ் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக வித்யுத் ஜம்வால், விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி படத்தில் இணைந்து மிரட்டியிருந்தார்.

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால்: படத்தில் வித்யுத் ஜம்வால் தீவிரவாதியாக நடித்து அதிரடி காட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஏஆர் முருகதாசுடன் நீண்ட காலங்களுக்கு பிறகு வித்யுத் இணைந்துள்ளார். இந்த கூட்டணி குறித்து அவர் தன்னுடைய மகிழ்ச்சியை சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகனை மட்டுமில்லாமல் வில்லனையும் மிரட்டலாக காட்டும் இயக்குநர்களில் ஏஆர் முருகதாஸ் முதன்மையானவர் என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். எஸ்கே23 படத்தின் கதையை தன்னிடம் ஏஆர் முருகதாஸ் கூறியதுடன் துப்பாக்கி படத்தில் செய்த மேஜிக்கை மீண்டும் இந்த படத்தில் உருவாக்க வேண்டும் என்று கேட்டதாகவும் தன்னுடைய பேட்டியில் வித்யுத் குறிப்பிட்டுள்ளார்.

வித்யுத் உற்சாகம்: சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தின் கதை தன்னை மிகப்பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்துள்ளதாகவும் வித்யுத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்கள் எப்போதும் தன் மீது காட்டும் பிரியம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் கூறியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் சென்னை சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் மற்றும் வித்யுத் ஜம்வால் இடையிலான மிகப்பெரிய அளவிலான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. இந்தப் படத்திலும் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கி பட மேஜிக்: முன்னதாக விஜய்க்கு மிகப்பெரிய அளவில் டஃப் கொடுக்கும்வகையில் துப்பாக்கியில் வித்யுத் ஜம்வாலின் கேரக்டர் அமைந்திருந்தது. அதேபோல தற்போது எஸ்கே 23 படத்திலும் வித்யுத்தின் கேரக்டர் மிகவும் அழுத்தமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த மாத இறுதியில் படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X