கவலையெல்லாம் இல்லீங்க.. சஞ்சய் சேஃபா இருக்கார்.. அடிக்கடி பேசுறாரு.. விஜய் தரப்பு விளக்கம்!

சென்னை: நடிகர் விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் சேஃபாக இருப்பதாக விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Manimegalai Lock down paridhabangal | Quarantine | Lock Down Diaries

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் கடந்த 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால் படம் ரிலீஸாவது தாமதமாகி வருகிறது.

கொரோனாவால் நாடே அல்லோகளப்பட்டு வருகிறது. ஏராளமான மக்கள் வேலையில்லாமல் அன்றாடம் உணவுக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிவாரணம்

நிவாரணம்

தொழில் துறை முடங்கியுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வசதி படைத்தவர்கள் கொரோனா நிவாரணம் வழங்க நன்கொடை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. தொழில் துறையினர் உள்ளிட்ட பலரும் அரசுக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

விஜய் சோகம்

விஜய் சோகம்

திரைத்துறையை சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். ஆனால் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் இதுவரை வாயே திறக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனமாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் பெரும் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

கனடாவில் விஜய் மகன்

கனடாவில் விஜய் மகன்

காரணம்.. நடிகர் விஜயின் மகனான சஞ்சய் கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார். உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல நாடுகள் லாக்டவுனை அறிவித்துள்ளன. பல நாடுகளில் விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து முடக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கனடாவில் ஊரடங்கு

கனடாவில் ஊரடங்கு

இதனால் கனடாவில் உள்ள கல்லூரியில் பிலிம் மேக்கிங் படித்துக் வரும் நடிகர் விஜயின் மகனான சஞ்சய், நாடு திரும்ப முடியாமல் உள்ளார். கனடாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜய் தரப்பு விளக்கம்

விஜய் தரப்பு விளக்கம்

கொரோனா வைரஸால் மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் மகன் சஞ்சய் மட்டும் தனியாக கனடாவில் இருப்பதால் விஜய் கவலையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஜயின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி சஞ்சய் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக இருக்கிறார்

பாதுகாப்பாக இருக்கிறார்

கனடாவில் அவர் இருப்பது உண்மைதான் இருந்த போதும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நடிகர் விஜய்யும் அவரது மகன் சஞ்சய்யும் அடிக்கடி போனில் பேசி வருகின்றனர். விஜய் கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X