சிறுவன் கையில் தீ.. அலட்சியத்தால் நடந்த விபரீதம்..விஜய் இதெல்லாம் கேட்டாரா? கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: தமிழகவெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, நீலாங்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், சாகம் செய்வதற்காக அழைத்துவரப்பட்ட சிறுவனில் கையில் தீ பற்றியது. இந்த சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விஜய் இதெல்லாம் கேட்டாரா என்று விஜய் தீவிர ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை இணையத்தில் கொட்டி தீர்த்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதில், சிகிச்சை பெற்று வருவோர்கள் உயிரிழந்து கொண்டே வருவது பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இதற்கு அரசின் அலட்சியமே காரணம் என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, விஜய் கள்ளக்குறிச்சி சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.

Vijay fire accident Kallakurichi

கொண்டாட்டம் வேண்டாம்: இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில், பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து விஜய் மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் விஜய்யின் பிறந்த நாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

பற்றி எரிந்த தீ: ஆனால், சென்னையில் ஈசிஆர் சரவணன், நீலாங்கரையில் ஒரு திருமண மண்டபத்தில், பிறந்த நாள் விழா நடத்தினார். இதில், சிறுவர்களை அழைத்து வந்து சாகச நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது, சாகசம் செய்ய வந்த சிறுவனின் கையில் மண்ணெண்னை ஊற்றி தீவைக்கப்பட்டது. அப்போது மாணவன் அங்கிருந்த ஓட்டை உடைத்துவிட்டு, கையில் இருந்த தீயை அணைக்க முயன்ற போது, தீ அணையாமல், மளமளவென கை முழுவதும் பற்றிக்கொண்டது.

மருத்துவமனையில் அனுமதி: அந்த தீயணை அணைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முயன்ற போது அவரின் கையில் இருந்த மண்ணெண்னை பாட்டிலிருந்த எண்ணெண்ணை கொட்டி மேலும் அதிகமாக தீப்பற்றி அவர் மீதும் தீ பரவியது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் துணிகளை கொண்டு, சிறுவனின் கையில் பற்றிய தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியதால், கையில் தீக்காயம் ஏற்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.

விஜய் கேட்டாரா? இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவால் டென்ஷனான விஜய்யின் ரசிகர்கள். எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் இப்படி ஒரு சாகச நிகழ்ச்சியை யார் நடத்த சொன்னது. விஜய் இதையெல்லாம் கேட்டாரா? அவர் பெயரை கெடுப்பதற்காக சில கூட்டம் இருக்கு என்று தளபதியின் ரசிகர்கள் இணையத்தில் தங்களது ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X