Vijay: ஜோசப் விஜய்ன்னு கதறுனீங்களே.. இங்க பாருங்க.. மதங்களை கடந்த அன்பு.. மாஸ் காட்டிய விஜய்!
சென்னை: நடிகர் விஜய் நேற்று சுமார் 13 மணி நேரம் நின்றுக் கொண்டே மாணவர்களுக்கான விருதுகளை வழங்கி கெளரவித்தார். அதன் காட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரியை விட நேற்று நடந்த குட்டி குட்டியான பல சுவாரஸ்ய சம்பவங்கள் சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பி உள்ளன.

ஜோசப் விஜய் என அவரது மதத்தை வைத்து எச். ராஜா உள்ளிட்ட சிலர் பஞ்சாயத்து பண்ண நிலையில், இங்க பாருங்க எங்க தளபதியை என ரசிகர்கள் ஷேர் செய்துள்ள வீடியோ தீயாக பரவி வருகிறது.
ஜோசப் விஜய்: நடிகர் விஜய் என்றும் இளைய தளபதி என்றும் தளபதி என்றும் அண்ணா என்றும் ரசிகர்கள் கொண்டாடி வந்த விஜய்யை திடீரென ஜோசப் விஜய் என சிலர் அடையாளப்படுத்தி மத அரசியலை பரப்பினர். அதன் பின்னர் ஆமாம், நான் ஜோசப் விஜய் தான் இப்போ என்ன அதுக்கு என நடிகர் விஜய்யே பேசியது பலருக்கும் பேக் ஃபயர் ஆகிவிட்டது.
தொடர்ந்து நடிகர் விஜய் தனது படங்களில் சிலுவையை பயன்படுத்தி வருகிறார் என்றும் சர்ச்சைகள் கிளம்பின.

இஸ்லாமிய குழந்தையை தூக்கிக் கொண்டு: இந்நிலையில், நேற்று நடைபெற்ற கல்வி விருது விழா நிகழ்ச்சியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தை சார்ந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நடிகர் விஜய் மீது மாறி மாறி அன்பை பொழிந்தனர்.
பதிலுக்கு நடிகர் விஜய்யும் எந்த மத பாரபட்சமும் பார்க்காமல் மனிதத்தை மட்டுமே பார்த்தபடி நடந்துக் கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இஸ்லாமிய குழந்தை ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்து மாஸ் காட்டி இருந்தார்.

திருநீறு வைத்துக் கொண்ட விஜய்: திருப்பாச்சி படத்தில் பட்டையாக திருநீறு பூசிக் கொண்டு நடித்த நடிகர் விஜய் ரியாலிட்டியிலும் தான் அப்படித்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
மாணவியின் அப்பா ஒருவர் திருநீறு வைக்க முயற்சி செய்த போது, வச்சிவிடுங்க என சொன்ன விஜய், மாணவிக்கும் அந்த திருநீறை வைக்கச் சொல்லி அந்த மாணவியின் அப்பா சொன்னதும், உடனடியாக அந்த மாணவிக்கு வைக்கும் காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகின்றன.
மதங்களை கடந்தவர் எங்கள் விஜய் அண்ணா என்றும் உங்களுடைய கேவலமான மத அரசியலை இங்கே செய்ய வேண்டாம் என்றும் விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











