twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது 40 வயது கேங்ஸ்டரா.. விஜய் -லோகேஷ் படம் குறித்த அடுத்த அப்டேட்.. தொடர் புல்லரிப்பில் ரசிகர்கள்!

    |

    சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி அதை வெற்றிப் படமாக்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

    இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கும் வேலைகளில் பிசியாகியுள்ளார்.

    படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

     லோகேஷ் ,நெல்சன், விக்னேஷ் தமிழ் சினிமாவை ரூல் பண்றாங்க... வெங்கட் பிரபு! லோகேஷ் ,நெல்சன், விக்னேஷ் தமிழ் சினிமாவை ரூல் பண்றாங்க... வெங்கட் பிரபு!

    விக்ரம் படம்

    விக்ரம் படம்

    நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, நரேன், பகத் பாசில், சூர்யா, காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி, மகேஷ்வரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது விக்ரம் படம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

    4 படங்கள்.. சிறப்பான பெயர்

    4 படங்கள்.. சிறப்பான பெயர்

    இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என 4 படங்களை மட்டுமே கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் தற்போது சர்வதேச அளவில் அறியப்படும் இயக்குநராக மாறியுள்ளார். அவரது விக்ரம் படம் அவருக்கு எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

    நெகட்டிவ் விமர்சனங்கள்

    நெகட்டிவ் விமர்சனங்கள்

    துப்பாக்கி, போதைக் கலாச்சாரத்தை அதிகமாக ரசிகர்களிடையே கொண்டு செல்கிறார் என்ற விமர்சனத்தை அவர் எதிர்கொண்டாலும், அவரது திரைக்கதை, மிரட்டலான காட்சி அமைப்புகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதற்கு உதாரணம் படம் 2 வாரங்களை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    ரூ.350 கோடி வசூல்

    ரூ.350 கோடி வசூல்

    கடந்த 15 நாட்களில் சர்வதேச அளவில் 350 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் கடந்துள்ளது. தொடர்ந்து இன்றும் நாளையும் வாரயிறுதி நாட்களாக அமைந்துள்ள நிலையில், இந்த வசூல் மேலும் எகிறும் என்று நம்பப்படுகிறது. தமிழகத்திலும் 140 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டியுள்ளது.

    விக்ரம் வெற்றி விழா

    விக்ரம் வெற்றி விழா

    நேற்றைய தினம் படத்தின் வெற்றி விழா சென்னை ரேஸ் கோர்சில் நடைபெற்ற நிலையில், படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளதாக நடிகரும் படத்தின் விநியோகஸ்தருமான உதயநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து படத்தின் இந்த சக்சஸ் மீட்டில் பேசிய நடிகர் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் படம் குறித்த சிறப்பான தகவல்களை பகிர்ந்தனர்.

    தளபதி 67 இயக்கம்

    தளபதி 67 இயக்கம்

    இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தில் இணையவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் அறிவிப்பு இன்னும் இரு தினங்களில் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    40 வயது கேங்ஸ்டர்

    40 வயது கேங்ஸ்டர்

    இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் எழுதி முடித்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தில் விஜய் 40 வயது கேங்ஸ்டராக நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் லோகேஷ் யூனிவர்சிலும் அவர் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Actor Vijay acts as a 40 years old Gangster in his next with Lokesh Kanagaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X