மும்பை கேங்ஸ்டராக விஜய்.. ஹீரோ ரெடி.. வில்லன்களும் ரெடி.. இயக்குநர் எப்பவோ ரெடி.. அறிவிப்பு எப்போ?

சென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்.

வாரிசு படத்தின் ரிலீசை காட்டிலும் தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பொங்கல் வெளியீடாக வாரிசு படம் ரிலீசாக உள்ள நிலையில், விரைவில் தளபதி 67 படத்தின் ரிலீசும் வெளியாகவுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலில் சாதனை புரிந்தது. இதையடுத்து தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் இணைந்துள்ளார் விஜய்.

எண்ணூரில் சண்டைக் காட்சிகள்

எண்ணூரில் சண்டைக் காட்சிகள்

இந்தப் படத்தின் பைட் சீன்கள் எண்ணூரில் எடுக்கப்பட்ட நிலையில் சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் படத்தின் டூயட் காட்சிகள் சிறப்பான செட் போடப்பட்டு எடுக்கப்பட உள்ளது. இந்த சூட்டிங்கில் விஜய்யுடன் ராஷ்மிகா பங்கேற்கவுள்ளார். இதையடுத்து வாரிசு படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைக்கோர்க்கவுள்ளார் விஜய். இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இந்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் மிகுந்த வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர். வாரிசு படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில் அதைக்காட்டிலும் தளபதி 67 படத்தின் அறிவிப்பே ரசிகர்களை அதிகமாக காத்திருக்க செய்துள்ளது.

மும்பை கேங்ஸ்டராக விஜய்

மும்பை கேங்ஸ்டராக விஜய்

தளபதி 67 படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் மும்பை கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக தற்போது அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மொத்தமாக 6 வில்லன்கள் உள்ளதாக முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார். அதில் தற்போது சூர்யா, சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், கௌதம் மேனன், பிரித்வி உள்ளிட்டவர்கள் வில்லன்களாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் யூனிவர்சில் விஜய்

லோகேஷ் யூனிவர்சில் விஜய்

கைதி, விக்ரமுடன் தளபதி 67 படதையும் லோகேஷ் யுனிவர்சில் இணைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் பகத் பாசில் மற்றும் நரேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதையொட்டி பார்த்தால் விக்ரம் படம் போலவே தளபதி 67 படமும் மல்டி ஸ்டார் படமாக அமையவுள்ளதாக தெரிகிறது.

 சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

இதனிடையே இந்தப் படத்தின் அறிவிப்பை தொடர்ந்து பலகட்ட அளவில் படத்தின் பிரமோஷன்களை தயாரிப்பாளர் லலித் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் கேரியரில் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதையொட்டி தளபதி 67 படம் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X