மாஸ்டர் படத்தால் இழப்பு ஏற்பட்டால்.. மீண்டும் ஒரு படம்.. தயாரிப்பாளருக்கு உறுதி கொடுத்த விஜய்?

சென்னை: மாஸ்டர் படத்தால் இழப்பு ஏற்பட்டால் மீண்டும் ஒரு படம் நடித்து கொடுப்பதாக தயாரிப்பாளர் லலித்குமாருக்கு நடிகர் விஜய் உறுதி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Master & Cobra Release Date • Exclusive Update | Thalapathy Vijay Vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். கடந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் லாக்டவுன் காரணமாக தள்ளிப்போயுள்ளது.

Actor Vijay agreed to act one film for Seven screen studio?

மாஸ்டர் படத்தில் விஜயும் விஜய் சேதுபதியும் முதல் முறையாக கூட்டு சேர்ந்துள்ளனர். இந்தப் படத்தை விஜயின் மாமாவான சேவியர் பிரிட்டோ, தனது எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் மூலம் செவன் ஸ்கிரின் ஸ்டியோஸின் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார்தான் பெற்றுள்ளார். இந்நிலையில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதில் ஏற்படும் தாமதத்தால் பெரும் பண நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் லலித்குமார்.

இதனை அறிந்த விஜய், மாஸ்டர் படத்தால் ஏதாவது பண சிக்கல் ஏற்பட்டால் எதிர்காலத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவுக்கு தான் ஒரு படத்தில் நடித்து தருவதாக கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விஜய் விரைவில் தனது 65வது படத்தை அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விஜயின் 65வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் விஜயின் மெர்சல் பட தயாரிப்பாளரான முரளி ராமசாமி சமீபத்தில் அளித்த ஒரு இன்டர்வியூவில் விஜயுடன் சேர்ந்து மேலும் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். ஆனால் விஜய் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை எப்படி தேர்வு செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X