twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிளம்புங்க ஹேட்டர்ஸ்.. விஜய் 8 வருஷத்துக்கு முன்னாடியே வரி கட்டிட்டாரு.. தீயாய் பரவும் ரசீது!

    |

    சென்னை: நடிகர் விஜய் லைஃப் டைம் வரி செலுத்திய ரசீது
    சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகர் விஜய் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த தனது சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விஜய் வரி செலுத்தவில்லை என செய்தி பரவியது.

    என்னங்கண்ணா இது.. சொகுசு கார் விவகாரம்.. வரிந்துகட்டிய விஜய் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்!என்னங்கண்ணா இது.. சொகுசு கார் விவகாரம்.. வரிந்துகட்டிய விஜய் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்!

    வரி செலுத்திய விஜய்

    வரி செலுத்திய விஜய்

    சமூக வலைதளங்களிலும் தகவல் பரவியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான முழு விபரமும் தெரிய வந்துள்ளது. அதாவது, நடிகர் விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பு வரி செலுத்தியுள்ளார். அதற்கு தற்போது விலக்கு கேட்கிறார்.

    சட்டவிரோதம் எதுவுமில்லை

    சட்டவிரோதம் எதுவுமில்லை

    சச்சின் டெண்டுல்கரின் ஃபெராரி உட்பட கடந்த சில ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பல சூப்பர் கார்களுக்காக இதுபோன்ற முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோதம் என்று கூறும் அளவுக்கு எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

    ரைவலாகும் ரசீது

    ரைவலாகும் ரசீது

    அதேநேரத்தில் நடிகர் விஜய், காருக்காக லைஃப் டைம் வரி செலுத்திய ரசீதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரி செலுத்திய ரசீதை அதிகளவு ஷேர் செய்து வரும் விஜய் ரசிகர்கள் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

    ரோல்ஸ் ராய்ஸுடன் விஜய்

    ரோல்ஸ் ராய்ஸுடன் விஜய்

    இந்த டிவிட்டில் தளபதி விஜய் ஏற்கனவே தனது ரோல்ஸ் ராய்ஸுக்கு முழு ஆயுட்கால வரியை செலுத்தியிருந்தார்

    வரியை குறைக்கவே அவர் கேட்டார் என பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான ரசீதும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Actor Vijay already paid the tax for his rolls royce car. Fans sharing the receipt on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X