அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்.. மீண்டும் மோதலில் விஜய் -அஜித் படங்கள்?
சென்னை : நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யின் துணிவு மற்றும் வாரிசு படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளன.
இந்தப் படங்கள் இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இரண்டு படங்களுமே 200 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தாண்டி இரு படங்களும் அரங்கு கொள்ளாத காட்சிகளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.

நடிகர்கள் விஜய் -அஜித்
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் கோலிவுட்டின் சிறப்பான ஹீரோக்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதல்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக அமைந்துள்ளது.

ஒரே நேரத்தில் ரிலீஸ்
இதை தொடர்ந்து இருவருடைய படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாவதை தவிர்த்து வந்தனர். ஆனால் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய் மற்றும் அஜித்தின் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ஒரே நேரத்தில் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

7 நாட்களில் ரூ210 கோடி வசூல்
இரு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் சில அத்துமீறல்கள், கண்ணாடி உடைப்புகள் என நடந்த போதிலும் இரண்டு தரப்பு ரசிகர்களும் தங்களின் ஹீரோக்களின் படங்களுக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர். விளைவு விஜய்யின் வாரிசு படம் சர்வதேச அளவில் 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

ரசிகர்கள் முழுமையான ஆதரவு
இது பொய்யான தகவலாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இதனிடையே அஜித்தின் துணிவு படமும் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டு வருகின்றனர். இந்த இரு படங்களுமே வித்தியாசமான ஜானர்களில் வெளியான நிலையில், இரண்டு படங்களுமே ரசிகர்களின் முழுமையான வரவேற்பை பெற்றுள்ளன.

விஜய் -அஜித் அடுத்த படங்கள்
இரண்டு படங்களிலுமே ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்கள் அதிகமாக காணப்பட்ட நிலையில், இரண்டு படங்களுமே சமமான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன. இதனிடையே அடுத்ததாக விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய தளபதி 67 படத்தில் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

தளபதி 67 -ஏகே62
இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தில் நடித்துவரும் இயக்குநர் மிஷ்கின் அப்டேட் தெரிவித்திருந்தார். படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பை இன்னும் சில தினங்களில் மேற்கொள்ள உள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே அஜித்தும் தனது ஏகே62 படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார்.

விரைவில் ஏகே62 சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் விவரமும் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்தின் ஜோடியாக, நயன்தாரா, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களில் ஒருவர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீஸ்?
இந்நிலையில் இந்த இரு படங்களின் சூட்டிங்கும் விரைவில் முடிக்கப்பட்டு படம் வரும் தீபாவளி ரிலீசாக நவம்பரில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாக அனுமதிக்கக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் மீண்டும் விஜய் -அஜித் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாகுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











