பிறந்தநாள் கொண்டாடும் அஜித்... விஜய்யுடன் வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்... செம்ம!

சென்னை : நடிகர் அஜித் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் அவரது ஏகே61 உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து சில தினங்களாகவே ட்ரெண்டிங்கில் உள்ளன.

Actor Vijay and Ajith with his daughter video goes viral in internet

நடிகர் அஜித்குமார் சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நேர்கொண்ட பார்வை படம் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில் வலிமை படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாக அவர் தற்போது இதே கூட்டணியில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனிடையே இன்றைய தினம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் என்னமோ சூட்டிங்கில் பிசியாக காணப்படுகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரது பிறந்தநாளை ட்ரெண்டிங்கில் வைத்திருந்தனர். இது மட்டுமில்லாமல் அவர் தற்போது நடித்துவரும் ஏகே61, ஏகே62 மற்றும் ஏகே63 ஆகிய படங்களும் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் காணப்படுகின்றன. மேலும் தொடர்ந்து இந்தப் படங்களின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர். ஏகே61 படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இன்றைய தினம் ஏகே61 படத்தின் அப்டேட் அல்லது டைட்டிலை வெளியிடுவார் என்று தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் போஸ்டர்கள், வீடியோக்களை வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சமூக பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் விஜய் இணைந்துள்ள பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது மகளுடன் அஜித் உள்ள நிலையில், விஜய் அவரது குழந்தையை கொஞ்சுவதாக அந்த வீடியோவில் காணப்படுகிறது. சமீப காலங்களில் வெளியில் இத்தகைய கொண்டாட்டங்களை அஜித் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் விஜய் மற்றும் அஜித் இருவரும் இணைந்திருக்கும்படியான இந்த வீடியோ கண்டிப்பாக இருவரின் ரசிகர்களை ஈர்க்கும்படியாக உள்ளது. அஜித்தின் பிறந்தநாளையொட்டி இந்த வீடியோ வெளியாகியுள்ளது மேலும் சிறப்பாக காணப்படுகிறது.

Recommended Video

Ajith Birthday-க்கு பிரபலங்கள் வாழ்த்து | Ajith 51'st Birthday | Filmibeat Tamil

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X