லியோ டைட்டில் ரிலீஸ்.. விஜய் -லோகேஷ் பகிர்ந்த டைட்டில்.. குவியும் லைக்ஸ்!
சென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது.
வாரிசு படத்தின் சூட்டிங்கின்போதே, தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவிய நிலையில், தற்போது, படத்தின் அறிவிப்பு, டைட்டில் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
படத்தின் டைட்டில் குறித்த பல்வேறு கணிப்புகள் நிலவிய நிலையில், படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்யின் பீஸ்ட், வாரிசு படங்களை காட்டிலும் தளபதி 67 படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு காரணம் முன்னதாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தை கொடுத்திருந்தனர். மேலும் லோகேஷின் இயக்கத்தில் வெளியான விக்ரம் படமும் தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தளபதி 67 பட அறிவிப்பு
இந்தப் படத்தின் அறிவிப்பை நீண்ட நாட்களாக படக்குழு வெளியிடாமலேயே ரசிகர்களின் பொறுமையை அதிகமாக சோதித்தது. வாரிசு படத்தின் சூட்டிங்கின் இடையிலேயே தளபதி 67 படத்திற்கான அப்டேட் தெரியவந்த நிலையில், படத்தின் அறிவிப்பு வெளியிடப்படாமலேயே இருந்தது. இதனிடையே தற்போது வாரிசு படம் ரிலீசாகி சில தினங்களை கடந்த நிலையில், தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியானவண்ணம் உள்ளது.

அடுத்தடுத்த அப்டேட்கள்
கடந்த 30ம் தேதி படத்திற்கான அறிவிப்பையும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட்களையும் தயாரிப்பு தரப்பு வெளியிட்டது. படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ள நிலையில், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட்களும் வெளியாகின.

காஷ்மீர் பயண வீடியோ
இதையடுத்து அடுத்த நாளே படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பும், அடுத்த நாளில் பூஜை ஸ்டில்ஸ் உள்ளிட்டவையும் வெளியாகின. இதனிடையே, இன்று மாலை படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாகவும் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியானது. முன்னதாக படத்தின் சூட்டிங்கையொட்டி படக்குழுவினரின் காஷ்மீர் பயண வீடியோவும் வெளியானது.

டைட்டில் ரிலீஸ்
இதனிடையே இன்று மாலை 5 மணியளவில் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு லியோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மற்றும் டைட்டில் குறித்த அறிவுப்புகளை படத்தின் ஹீரோ விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

அதிகமான வியூஸ்
விஜய்யின் இந்த பகிர்வு வெளியிடப்பட்ட ஒரு மணிநேரத்திற்கு உள்ளாகவே ஒரு மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இதேபோல லைக்ஸ்களும் ஏறக்குறைய 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதேபோல லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பக்கத்திலும் இந்த பதிவு ஏறக்குறைய 7 லட்சம் வியூஸ்களையும் 75 ஆயிரம் லைக்ஸ்களையும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











