Mohan Raja: விரைவில் விஜய்யுடன் இணையும் மோகன்ராஜா.. மூன்று ஸ்கிரிப்ட் ரெடி!

சென்னை: நடிகர் விஜய் -இயக்குநர் மோகன்ராஜா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது வேலாயுதம் படம்.

இந்தப் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணையவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் விஜய்க்காக தான் 3 ஸ்கிரிப்ட்களை உருவாக்கியுள்ளதாகவும் விரைவில் தங்களது கூட்டணி இணையும் என்றும் மோகன் ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Actor Vijay and Director Mohan Raja going to join soon for Action entertainer

விஜய்க்காக 3 ஸ்கிரிப்ட்களை உருவாக்கிய மோகன் ராஜா: நடிகர் விஜய் மற்றும் மோகன்ராஜா கூட்டணியில் வெளியான வேலாயுதம் படம் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமைந்தது. எப்போதும் புதிய இயக்குநர்களின் கூட்டணியில் இணைய விஜய் விரும்புவார். அந்த வகையில் இணைந்த இந்த கூட்டணி சிறப்பாகவே அமைந்த நிலையில், மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து படம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னதாக விஜய்க்காக தான் டபுள் ஆக்ஷன் ஸ்கிரிப்டை தயாரித்ததாக மோகன் ராஜா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக விஜய்யும் ஒப்புதல் தெரிவித்த நிலையில், அந்த நேரத்தில் வெளியான அருண் விஜய்யின் தடம் படம் தன்னுடைய படத்தின் ஸ்கிரிப்ட் போலவே இருந்ததால் இந்தப் படத்தை எடுக்க முடியாமல் போனதாகவும் மோகன் ராஜா தற்போது கூறியுள்ளார்.

இதையடுத்து தற்போது அந்த ஸ்கிரிப்டை இன்னும் வெறித்தனமாக மாற்றி அமைத்துள்ளதாகவும் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இந்தக் கதை மட்டுமில்லாமல் மேலும் இரண்டு சூப்பர் கதைகளையும் விஜய்க்காக தான் தயாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தக் கதைகள் குறித்து விரைவில் விஜய்யுடன் விவாதிக்கவுள்ளதாகவும் விரைவில் தங்களது கூட்டணி அமையும் என்றும் மோகன் ராஜா தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் தன்னுடைய இணைந்து பணிபுரிய விஜய் மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும் ஆனால் தடம் படத்தின் சாயல் தன்னுடைய கதையில் இருந்ததால் தான் விஜய்யிடம் தான் புதிய கதையும் அவரை பின்பு சந்திப்பதாக கூறிவிட்டு வந்ததாகவும் மோகன் ராஜா தற்போது கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அந்தக் கதையை மிகவும் சிறப்பாக விஜய் ரசிகர்களை கவரும் வகையில் தான் அமைத்துள்ளதாகவும் மோகன் ராஜா மேலும் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பான பல படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குநராக தன்னை தென்னிந்திய அளவில் நிலை நிறுத்தியுள்ளார் மோகன் ராஜா. இவர் தன்னுடைய தம்பியை வைத்து இயக்கிய தனி ஒருவன் படம் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் தனி ஒருவன் 2 படத்தில் இணையவுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X