Vijay: பிரேமலதாவை சந்தித்த விஜய்.. கோட் படத்தில் கேப்டனின் கேமியோ கேரக்டர் குறித்து டிஸ்கஷன்!
சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
கோட் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் அவரை இந்த படத்தில் படக்குழுவினர் நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் பிரேமலதா விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சென்று நடிகர் விஜய் உள்ளிட்ட கோட் படக்குழுவினர் சந்தித்துள்ளனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் -வெங்கட பிரபு கூட்டணியில் உருவாகியுள்ளது கோட் படம். இந்த படத்தில் விஜய் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்படும் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் தற்போது கோட் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. இதனிடையே படத்தின் ட்ரெயிலரும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது.

மோகனின் வில்லனிசம்: படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சிநேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் படத்தில் வில்லனாக 90களில் வெள்ளிவிழா நாயகனாக கொண்டாடப்பட்ட மோகன் நடித்துள்ளார். அவரது வில்லனிசம் கோட் படத்திற்கு எத்தகைய மிரட்டலை கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரேமலதாவை சந்தித்த விஜய்: இதனிடையே மறைந்த கேப்டன் விஜயகாந்த் இந்த படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் படக்குழுவினர் நடிக்க வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அவர் இரண்டு நிமிட நேரம் தோன்றுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கோட் படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளது குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இன்றைய தினம் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளனர்.
கவனத்தை பெற்றுள்ள சந்திப்பு: இந்த சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்த்திற்கு நடிகர் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். மேலும் விஜயகாந்தின் உருவப்படத்திற்கும் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது விஜயகாந்தின் மகன்களும் உடன் இருந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்த் நடித்துள்ள காட்சிகளை அவர்களிடம் காண்பித்து கோட் டீம் ஆலோசனை மேற்கெண்டதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சிப்பணிகளை தொடர்ந்து அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் அவர் தேமுதிக தலைவரை நேரில் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











