கோட் டீமுடன் வெற்றியை கொண்டாடிய தளபதி.. கேக்கை வெட்டி ஊட்டியும் விடுறாரே!

சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வந்த நிலையில் தற்போது தன்னுடைய இறுதி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கிய நிலையில் தற்போது படத்தின் டைட்டில் சாங்கின் ஷூட்டிங்கை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர்.

தளபதி 69 படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடந்த மாதம் 5ம் தேதி வெளியான விஜய்யின் கோட் படம் சர்வதேச அளவில் 455 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

vijay goat movie ags entertainment


நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. படத்தின் ஒட்டுமொத்த வசூல் 455 கோடி ரூபாய் என்று ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் தமிழக ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று இந்த படத்தை தொடர்ந்து பார்த்து வந்தனர்.

விஜய் வெட்டிய கேக்: வாரயிறுதி நாட்களில் மட்டுமில்லாமல் வார நாட்களிலும் கோட் படத்தை பார்க்க திரையரங்குகளில் அதிகமான கூட்டம் கூடியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த படம் தமிழகத்தில் 100 கோடி ஷேரை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கொண்டாட்டத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் ஈடுபட்ட நிலையில் இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய்யும் இணைந்து கொண்டார். இதற்காக வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கேக்கை அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்து வெட்டிய விஜய், அதை அவருக்கு ஊட்டி விட்டதையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து அவருக்கு அர்ச்சனா கேக் ஊட்டி விட்டார்.

கொண்டாட்டத்தில் விஜய்: இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நடிகர் விஜய் எப்போதும் அதிகமான கொண்டாட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார். ஆனால் படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களில் அவர் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஏஜிஎஸ்ஸின் வெற்றிக் கொண்டாட்டத்தில் அவர் இணைந்துள்ளார். இந்த நிகழ்வில் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் யாரும் இணையவில்லை.

தளபதி 69 படம்: அடுத்ததாக தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கிவரும் நிலையில் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது. இதன் முதல் ஷெட்யூல் தற்போது நடந்து முடிந்துள்ளது. முதல்கட்டமாக படத்தின் பாடல் காட்சியை இயக்கி முடித்துள்ளார் ஹெச் வினோத். அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X