மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா... அந்தப் படத்திலா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: இயக்குநரும் நடன இயக்குநருமான நடிகர் பிரபு தேவா நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பிரபு தேவா. நடன இயக்குநராக அறிமுகமான பிரபு தேவா, சரத்குமார் - ரோஜா நடிப்பில் வெளியான இந்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர்.

பின்னர் அதே ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பெரும் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் பிரபு தேவா.

பிரபுதேவா படங்கள்

பிரபுதேவா படங்கள்

ராசய்யா, லவ் பர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை, டைம், ஏழையின் சிரிப்பில், ஜேம்ஸ்பாண்டு, பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை போகுதே, மனதை திருடி விட்டாய், சார்ளி சாப்லின் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கோரியோகிராஃபர்

கோரியோகிராஃபர்

கடைசியாக அவரது நடிப்பில் தேவி 2 படம் ரிலீஸ் ஆனது. நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வலம் வரும் பிரபு தேவா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் படங்களை இயக்கி வருகிறார். நடன இயக்குநராகவும் வலம் வரும் நடிகர் பிரபு தேவா, பல மொழிகளிலும் முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களுக்கு கோரியோகிராஃபராக உள்ளார்.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

இந்நிலையில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் வரும் 19ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் பிரபு தேவா. நடனத்திலும் கவனம் செலுத்தி வரும் பிரபு தேவா, இந்தி, தெலுங்கு என்று முன்னணி கதாநாயகர்களுக்கு நடனம் அமைத்து கொடுத்து வருகிறார்.

நடன இயக்குநராக..

நடன இயக்குநராக..

பிரபு தேவாவின் கோரியோகிராஃபிக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யுடன் மீண்டும் பிரபு தேவா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் படத்தில் நடிகர் பிரபு தேவா நடன இயக்குநராக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 66?

தளபதி 66?

எந்தப் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் தளபதி 66 படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் விஜய்யும் பிரபு தேவாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X