மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா?.. எந்த படத்தில் தெரியுமா ?

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய், பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வாரிசு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வாரிசு படத்திலிருந்து அடுத்தடுத்த மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வாரிசு

வாரிசு

வாரிசு திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, ஜெயசுதா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

இதையடுத்து, இரண்டாம் கட்டபடப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், வாரிசு படத்திலிருந்து விஜய்யின் தோற்றம் மற்றும் படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியானதால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வாரிசு படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. செட் அமைக்கும் பணி முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67

தளபதி 67

வாரிசு படத்தை முடித்தவுடன் நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய்யின் 67வது படமாகும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சமந்தாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது. சமந்தா இதற்கு முன்னதாக விஜய்யுடன் கத்தி, தெறி மற்றும் மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் பிஸியாக

பல படங்களில் பிஸியாக

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் குஷி தெலுங்கு படத்தில் சமந்தா நடித்து வருகிறார். சாகுந்தலம் புராண படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்தில் வருகிறார். இதுவும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

விவாகரத்துக்கு காரணம்

விவாகரத்துக்கு காரணம்

மேலும், காபி வித் கிரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், நம்முடைய மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கைக்கு நாம் தான் முழுக்க காரணம் என்றும், நம்முடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத போது வாழ்க்கை கடினமானதாக மாறுகிறது என்று நடிகை சமந்தா விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X