விஜய்.. சங்கீதா தம்பதிக்கு இன்று 21வது திருமண நாள்.. இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி !
சென்னை : நடிகர் விஜய் சங்கீதாவை திருமணம் செய்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
Recommended Video
ஸ்ரீலங்காவை சேர்ந்த சங்கீதா விஜய் மீது கொண்ட தீராத காதலினால் இருவீட்டாரின் சம்மதத்துடன் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறு விஜய் சங்கீதா தம்பதியினர் 21 ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கை நடத்தி வருவதையொட்டி விஜய்யின் ரசிகர்கள் மற்றும் பல்வேறு திரைப்பிரபலங்கள் இவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக
தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் ரசிகர்களை கொண்டு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்
சென்ற ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து வந்த நிலையில் தற்போது மாநகரம் மற்றும் கைதி படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

சுவாரஸ்யமான விஷயங்கள்
விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா மற்றும் அர்ஜுன் தாஸ் என பிரபலமான பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளது என்ற செய்திகள் அவ்வப்போது வெளிவந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூட்டி வருகிறது.

தகவல்கள் கசிந்து
இதற்கிடையில் விஜய்யின் அடுத்த திரைப்படம் யாருடன் இணையப் போகிறார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில், இதுவரை அதை பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இருவீட்டாரின் சம்மதத்துடன்
இந்நிலையில் 1999ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கும், ஸ்ரீலங்காவை சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு ஜாசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர்.

க்ளைமாக்ஸ் காட்சியில்
சஞ்சய் மற்றும் திவ்யாவின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தநிலையில் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து படித்து வரும் சஞ்சய்யின் பள்ளி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. மேலும் சஞ்சய் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு அசத்தியிருப்பார். அதைப்போன்று மகள் திவ்யாவும் தெறி திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் தோன்றி அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார்.

21வது திருமண நாள்
இவ்வாறு குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் நடிகர் விஜய், சங்கீதாவை திருமணம் செய்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஆகஸ்டு 25 ஆம் தேதியான இன்று விஜய் சங்கீதா தம்பதியினர் தங்களது 21வது திருமண நாளைக் கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் பல திரை பிரபலங்கள் திருமண நாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











