Vijay & Rajinikanth: கேரளாவில் நடக்கும் விஜய் & ரஜினிகாந்த் படங்களின் சூட்டிங்.. ரசிகர்கள் உற்சாகம்!

திருவனந்தபுரம்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூல் தொடர்ந்து சில தினங்கள் நடக்கவுள்ளதாகவும் இதில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். முன்னதாகவே பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினரும் கேரளா புறப்பட்டு சென்ற நிலையில், நேற்று முன்தினம் இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய தம்பி பிரேம்ஜியுடன் கேரளா சென்றதை பார்க்க முடிந்தது.

படத்தின் சூட்டிங் நேற்று முன்தினமே கேரளாவின் திருவனந்தபுரத்தில் துவங்கியுள்ளது. இரவு நேரத்தில் இந்த சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த காவலன் படத்திற்காக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா சென்றிருந்தார் விஜய். இதையடுத்து கேரளா செல்லாத அவர், தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். கேரளாவில் விஜய்யின் தீவிர ரசிகர்கள் அதிகமாக உள்ள நிலையில், அவரை விமானநிலையத்தில் சிறப்பாக வரவேற்ற ரசிகர்கள், தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

Actor Vijay and Superstar Rajinikanth s movie shooting happening today in Trivandrum

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. அடுத்ததாக மாஸ்கோவிற்கும் இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஏப்ரல் முதல் வாரத்தில் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த சூட்டிங்கிற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா சென்றுள்ளார் விஜய். முன்னதாக காவலன் படத்திற்காக அவர் கேரளா சென்றுள்ளார். விஜய்க்கு கேரளாவில் தீவிர ரசிகர்கள் காணப்படும் சூழலில் அவரை முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கேரள ரசிகர்கள் உற்சாகம்: அவர் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற நிலையில் அவரை காத்திருந்து வரவேற்ற ரசிகர்கள், தொடர்ந்து அவரது காரை பின்தொடர்ந்து ஊர்வலமாக சென்று விஜய் தங்கியிருந்த ஹோட்டல் வரையில் சென்றனர். முன்னதாக விஜய்யின் சூட்டிங் நடக்கவுள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் விஜய்க்கு ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து நேற்றைய தினம் ரசிகர்களை சந்தித்த விஜய், மாலையை போட்டுக் கொண்டார். தொடர்ந்து மலையாளத்தில் பேசி அசத்திய அவர், அங்கிருந்த ஒரு குழந்தையை கொஞ்சிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகின.

ரஜினிகாந்த் பட சூட்டிங்: இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் இன்றைய தினம் திருவனந்தபுரத்தில் துவங்கியுள்ளது. டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங்கை ஞானவேல் துரிதப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக ரஜினிகாந்தும் தற்போது திருவனந்தபுரத்தில்தான் உள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடிகர் விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் ஒரே ஹோட்டலில்தான் தங்கியுள்ளனர். இதையடுத்து இருவரும் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேட்டையன் படம்: ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த், இந்தப் படத்தை இந்த மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை லோகேஷ் கனகராஜ் செய்து வருகிறார். விரைவில் படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X