Leo Trisha: த்ரிஷாவுடன் அப்படியொரு லிப் கிஸ்.. அந்த ஒரு சீனுக்கே லியோ படத்தை தாராளமா பார்க்கலாம்!

சென்னை: நடிகர் விஜய் இதுவரை குஷி, நண்பன் உள்ளிட்ட படங்களில் மட்டுமே லிப் கிஸ் காட்சிகளில் நடித்துள்ளார். பல படங்களில் குழந்தைகள் ஆடியன்ஸுக்காக அதை தவிர்த்து வந்த நிலையில், லியோ படத்தில் மீண்டும் த்ரிஷாவுடன் உதட்டு உம்மா காட்சியில் ரசிகர்களை பதை பதைக்க வைத்துள்ளார்.

Actor Vijay and Trisha done a Lip Kiss scene for Leo

படத்துக்கு தேவைன்னு நடிகர் விஜய்யை அசிங்கமா பேச வைத்த அந்த காட்சியில் தான் த்ரிஷா விஜய்க்கு லிப் கிஸ் அடிப்பதும், பதிலுக்கு விஜய் த்ரிஷாவுக்கு முத்த மழை பொழிவதும் என பயங்கரமான சீன் பயங்கர மூடான சீனாக மாறி விடுகிறது.

லியோவில் என்னடா த்ரிஷா சைடு ரோல் மாதிரி அமைதியாவே இருக்காரே என அப்செட் ஆன தலைவியின் ரசிகர்களுக்கு அந்த ஒரு சீனே போதும் படத்தை பல முறை தியேட்டரில் சென்று பார்ப்பதற்கு பக்காவான காரணமாக உள்ளது.

15 வருஷத்துக்கு பிறகு மீண்டும்: தளபதி விஜய்யுடன் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகை த்ரிஷா இணைந்து நடித்துள்ளார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என 4 படங்களிலும் ஜோடி பொருத்தம் அப்படி இருக்க அதே கெமிஸ்ட்ரியை மீண்டும் லியோவில் கடத்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். காஷ்மீர் பனியில் அப்படியே ஆப்பிள் போல அழகா இருக்கும் த்ரிஷாவுக்கு படத்தில் ஒரு செம சீனும் வைத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ்.

Actor Vijay and Trisha done a Lip Kiss scene for Leo

த்ரிஷாவுடன் லிப் லாக்: 20 வருடங்களாக தன்னுடன் வாழ்ந்து வரும் பார்த்திபனை லியோ தாஸா இல்லையா? என செக் செய்ய நடிகை த்ரிஷா எடுக்கும் முயற்சியை அறிந்து கொள்ளும் காட்சியில், உண்மையாகவே பார்த்திபன் வேறு, லியோ வேறு என்கிற முடிவுக்கு த்ரிஷாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும், ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் இயக்குநரை கூட நம்ப வைக்கும் அளவுக்கு லோகேஷ் இயக்கி உள்ள சீனில் உடைந்து அழும் விஜய்க்கு லிப் கிஸ் கொடுத்து த்ரிஷா நான் உன்னை நம்புறேன் பார்த்தி என சொல்லும் சீன் தியேட்டரே தெறிக்குது. இந்த ஒரு காட்சிக்கு மட்டும் தலைவி த்ரிஷாவின் ரசிகர்கள் உயிர் உங்களுடையது தேவி என கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X