என்னது விஜய்யும் த்ரிஷாவும் ப்ரேக்ல இருந்தாங்களா.. அதனாலத்தான் கௌதம் மேனன் பர்த்டே கிளிக்ஸ்ல இல்லையா
ஸ்ரீநகர் : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து உருவாகிவரும் படம் லியோ. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் சூட்டிங் கடுமையான குளிருக்கிடையில் காஷ்மீரில் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. அங்கு 60 நாட்கள் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடுமையான குளிரிலும் ஒரு வீரனைப் போல சூட்டிங்கை லோகேஷ் நடத்தி வருவதாக இயக்குநர் மிஷ்கின் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

லியோ படம்
நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட் இந்த மாதத்தின் துவக்கத்தில் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

கடுமையான குளிரில் சூட்டிங்
இந்நிலையில் அந்த அப்டேட்டை தொடர்ந்து காஷ்மீரில் சூட்டிங்கை நடத்த படக்குழுவினர் கிளம்பி சென்றனர். கடுமையான குளிருக்கிடையிலும் விறுவிறுப்பான சூட்டிங்கை திட்டமிட்டு லோகேஷ் இயக்கி வருகிறார். தினந்தோறும் காலை 10 மணி முதல் 5 மணி வரை சூட்டிங் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

கடுமையான குளிர்
படத்தின் சூட்டிங் துவங்கியவுடனே காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பினார் த்ரிஷா. இதனால் பல்வேறு யூகங்களுக்கு இடம் ஏற்பட்டது. தொடர்ந்து காஷ்மீரின் குளிர் தாங்காமல் அவர் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ள இயக்குநர் மிஷ்கினும் கடுமையான குளிர் உள்ளதை தன்னுடைய அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

விஜய் -த்ரிஷா பிரேக்
இதனிடையே, விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் கடந்த சில தினங்களாக, காஷ்மீரிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு சென்னை வந்ததாகவும், தற்போது மீண்டும் காஷ்மீர் சூட்டிங்கில் அவர்கள் பங்கேற்பதற்காக சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் சமீபத்தில் கௌதம் மேனன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர்கள் இடம்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

திட்டமிடலுடன் லோகேஷ்
காஷ்மீரில் படத்தின் சூட்டிங்கை 60 நாட்களில் முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து மிகுந்த திட்டமிடலுடன் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறார். தன்னுடைய சண்டை காட்சிகள், 500 ஸ்டண்ட் கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்டதாக படத்தின் சூட்டிங்கை முடித்த மிஷ்கின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











