Vijay & Trisha: விஜய்.. த்ரிஷா.. காலங்கள் கடந்தாலும் குறையாத தொழில்பக்தி!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான லியோ படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது.
இந்தப் படத்தின் சக்சஸ் மீட் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியது ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

லியோ படம்: விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசான லியோ படம் 500 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.
லியோ சக்சஸ் மீட்: இந்தப் படத்தின் சக்சஸ் மீட் கடந்த 1ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிலையில், விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் பார்க்க முடிந்தது. வழக்கமாக இசை வெளியீட்டின்போது குட்டிக் கதை சொல்லி ரசிகர்களை கவரும் விஜய், இந்தப் படத்திற்கான இசை வெளியீடு நடக்காத நிலையில், சக்சஸ் மீட்டில் தன்னுடைய குட்டி ஸ்டோரியை சொல்லி அசத்தினார்.
தளபதி 68 படம்: லியோ படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் இணைந்திருந்தார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கிய நிலையில், படத்தின் பாடல் காட்சியை முதலில் எடுத்து முடித்துள்ளது படக்குழு.
தாய்லாந்தில் தளபதி 68 சூட்டிங்: தொடர்ந்து சென்னையில் சில ஆக்ஷன் காட்சிகளும் சூட் செய்யப்பட்ட நிலையில் படக்குழுவினர் தற்போது தாய்லாந்தில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக சென்றுள்ளனர். இதனிடையே இந்த சூட்டிங்கில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தாய்லாந்திற்கு இன்றைய தினம் பயணமாகியுள்ளார். கடந்த 1ம் தேதி லியோ சக்சஸ் மீட்டில் பங்கேற்ற விஜய், நேற்றைய தினம் தாய்லாந்து செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே, புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு விஜய் சென்றிருந்தார்.
விஜய்யின் தொழில் பக்தி: இதனால் இன்றைய தினம் விஜய் தாய்லாந்து புறப்பட்டு சென்றிருந்தார். இன்றைய தினம் தளபதி 68 படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், நேரடியாக விஜய் ஓய்வெடுக்காமல் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த சூட்டிங் பாங்காக்கின் புறநகர் பகுதிகளில் நடப்பதால், அந்த இடத்திற்கும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய் ஒரு பெரிய ஸ்டாராக இருந்தபோதிலும் சூட்டிங்கை தள்ளிவைக்காமல் பங்கேற்றுள்ளார். அவருடைய தொழில்பக்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
த்ரிஷாவின் தொழில் பக்தி: இதனிடையே, லியோ சக்சஸ் மீட்டில் பங்கேற்பதற்காக அஜர்பைஜானில் இருந்து சென்னை வந்திருந்த த்ரிஷா, நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த நிலையில், நேற்றைய தினம் மீண்டும் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளார். அவருக்கும் இன்றைய தினம் சூட்டிங் இருந்தது. நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்காக தற்போது அஜர்பைஜானில் உள்ளார் த்ரிஷா. இவரும் 20 ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் இவரது தொழில்பக்தியும் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











