கட்டாயம் இருந்ததால செஞ்சேன்.. நானே விட்டுட்டேன்.. சர்ச்சைக்கு விஜய் ஆண்டனி விளக்கம்!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் படங்கள் ஒரு ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாகி வருகின்றன/ அந்த வகையில் தற்போது அவரது நடிப்பில் ஹிட்லர் படம் ரிலீசாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் சிறப்பு காட்சி படமாக்கப்பட்ட நிலையில். தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஜய் ஆண்டனி பேசினார்.
அப்போது ஹிட்லர் படத்தில் இடம் பெற்றுள்ள சில சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்த விளக்கத்தை விஜய் ஆண்டனி அளித்துள்ளார். படத்துக்கு தேவைப்பட்டதால் தான் அந்த காட்சிகள் படத்தில் சேர்க்கப்பட்டதாகவும் மற்றபடி எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அவர் தன்னுடைய விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி: நடிகர் விஜய் ஆண்டனி பல ஆண்டுகளாக தொடர்ந்து நடிப்பிலும் இசையமைப்பிலும் மாஸ் காட்டி வருகிறார். இது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் இவர் தன்னுடைய அடுத்தடுத்த செயல்களை தொடர்ந்து வருகிறார். மிகவும் அழுத்தமான கேரக்டர்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, சில சமயங்களில் கமர்சியல் ஹீட்களையும் கொடுத்து வருகிறார். தன்னுடைய படங்களுக்கு தானே இசையமைத்து வருகிறார். சில நேரங்களில் மற்றவர்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவரது அடுத்தடுத்த படங்கள் குறுகிய கால இடைவெளிகளில் வெளியாகி வருகின்றன.
நாயகி மது அருந்தும் காட்சி: கொலை, ரத்தம் என வித்தியாசமான தலைப்புகளுடன் இவரது படங்கள் வெளியாகி வரும் சூழலில், தற்போது ஹிட்லராக ரசிகர்களை மிரட்ட தயாராகியுள்ளார். விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படம் ரிலீசாகியுள்ள நிலையில் முன்னதாக படத்திற்கு அதிகப்படியான பிரமோஷன்களை கொடுத்திருந்தார். இந்நிலையில் படத்தின் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பான பின்பு செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, படத்தில் இடம் பெற்ற சர்ச்சை காட்சிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். படத்தில் நாயகி மது அருந்துவதாக காட்டப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள விஜய் ஆண்டனி. படத்திற்கு இந்த காட்சி தேவையாக இருந்ததால் அதை சேர்த்ததாக கூறியுள்ளார்.
குடிப்பது கேடுதான்: முன்னதாக ரோமியோ படத்திலும் நாயகி முதலிரவு அறையில் மது அருந்துவதாக காணப்பட்டது. இந்தக் காட்சி படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைந்தது. இந்நிலையில், தற்போது ஹிட்லர் படத்தில் இந்த காட்சியை தேவைக்காகவே சேர்த்ததாகவும் வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். மது அருந்துவது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மனிதருக்கும் கேடுதான் என்று கூறியுள்ள விஜய் ஆண்டனி, இது தெரிந்ததால் தானும் மது அருந்துவதை விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
கலவையான விமர்சனங்கள்: இதுவும் படத்தின் கதைக்களத்திற்கு தேவை என்பதால் சேர்க்கப்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. அவரது அடுத்தடுத்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெறும் நிலையிலும் குறுகிய கால இடைவெளிகளில் அவரது படங்கள் ரிலீசாகிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஹிட்லர் படமும் அவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்துள்ளன.
இயக்குநர் தனா: நீண்ட ஆண்டுகளாக விஜய் ஆண்டனி நடித்துவரும் நிலையிலும் அவரது நடிப்பு இன்னும் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹிட்லர் படத்திலும் அவரது நடிப்பு சராசரிக்கு கீழ்தான் இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் அரதப்பழசான கதைக்களத்தை இயக்குனர் தனா கையாண்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. குடும்ப உறவுகள் மற்றும் அதன் சிக்கல்களை இந்தப்படம் கதைக்களமாக கொண்டிருந்தது.


Click it and Unblock the Notifications











