எல்லாமே கடன்.. நான் செய்த தவறை செய்யாதீங்க ப்ளீஸ்.. மார்கன் பட இயக்குநருக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ்!
சென்னை: முன்னணி எடிட்டராக இருந்த லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் தான் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆண்டனி, படத்தின் இயக்குநருக்கு சில அட்வைஸ்களை கொடுத்தார்.
இசையமைப்பாளர்,நடிகர், இயக்குநர், பாடகர், எடிட்டர் என பல திறமைகளை கொண்டன விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகளை கையில் எடுத்து நடித்து வருகிறார். நான் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமனா இவர், சலீம், பிச்சைக்காரன், சைத்தான் என அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். தற்போது இவர், அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கி இருக்கும் மார்கன் படத்தில் நடித்து இருக்கிறார். மர்மம் கலந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் வில்லனாக நடித்துள்ளார்.
மார்கன்: இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கியமான, மறக்க முடியாத நாள் இருக்கும், இப்படிப்பட்ட ஒரு நாள் தான் இன்று. இயக்குநர் சசி சார் 'டிஷ்யூம்' படத்தின் மூலமாக என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். மறுபடியும் 15 ஆண்டுகள் கழித்து என்னை 'பிச்சைக்காரன்' படத்தில் கதாநாயகனாக்கினார். இத்தனை ஆண்டுகளில் எத்தனை தோல்வி படத்தை நான் கொடுத்து இருந்தாலும், சசி இயக்கும் அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். இதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு.

விஜய் ஆண்டனி: நான் தொடர்ந்து படங்களைத் தயாரிப்பதைப் பார்த்து, பலர் என்னிடம் அதிகப் பணம் இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். எல்லாமே கடன்தான், அதற்கு மாதம் மாதம் வட்டி கட்டி வருகிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் லியோ ஜான் பாலை எனக்கு 'பிச்சைக்காரன்' படத்தி இருந்தே தெரியும். அவர் ஒரு திறமையான எடிட்டடர். நான் செய்த தவறை அவர் செய்யக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். நான் படத்தில் நடிக்க வந்த பிறகு, இசையமைப்பதை நிறுத்திவிட்டேன். நீங்கள் இன்னும் எத்தனை படத்தை இயக்கினாலும், எடிட்டிங் செய்வதை நிறுத்திவிடக்கூடாது. நான் தற்போது மீண்டும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறேன், மற்ற நடிகர்களின் படத்தையும் தயாரிக்க இருக்கிறேன் என்றார். இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய் ஆண்டனி, முகத்தின் ஒரு பக்கம் மற்றும் கை முழுக்க கருப்பு சாயத்தை பூசி வந்திருந்தார்.
மிரட்டலான டிரைலர்: இதையடுத்து மார்கன் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது, டிரைலரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தொடர் கொலை என பதைபதைக்க வைக்கும் காட்சிகளுடன் டிரைலர் பயமுறுத்துகிறது. மர்ம ஊசியை போட்டு பெண்களை கொலை செய்யும் மர்ம கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ்காரராக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். டிரைலர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது. இப்படம் இப்படம் வரும் ஜூன் 27 ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. அந்த படத்தை தொடர்ந்து, வள்ளி மயில், அக்னி சிறகு, காக்கி, சக்தி திருமகன் ஆகிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











