தமிழ்பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி !

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி தமிழ்பட இயக்குனர் சி.எஸ்.அமுதனின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

இப்படம் ஒரு புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்றும், பார்வையாளர்களை அது சுவாரஸ்யமாக கவர்ந்திழுக்கும் என்று சி.எஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை

நகைச்சுவை

சிவா நடித்த தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சி.எஸ்.அமுதன். நகைச்சுவை திரைப்படமான அந்த அனைவரின் பாட்டுக்களையும் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, ரெண்டாவது படம் என்ற பெயரில் படத்தை இயக்கினார், ஆனால் அந்த படம் வெளியாக வில்லை. அடுத்ததாக தமிழ்படம் இரண்டாம் பாகத்தை இயக்கினார் இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

விரைவில் டைட்டில்

விரைவில் டைட்டில்

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அமுதன் தெரிவித்துள்ளார். அதில், எனது அடுத்த படம் எனது கல்லூரி நண்பர் விஜய் ஆண்டனி நாயகனராக நடிக்க இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பாக இருக்கும். ஆயத்த வேலைகள் தொடங்கிவிட்டன. பெரிய அளவிலான நடிகர், நடிகையர் தேர்வு இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுஒரு க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும்.விஜய் ஆண்டனி திரைப்படத்துக்கே உரிய கண்ணிமான, நேர்மையான, ஒரு தலைப்பு விரைவில் அறிக்கப்படும் என்று சி.எஸ் அமுதன் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Wife அ விட்டுக்கொடுக்க முடியாது but இவங்க தான் எல்லாம் | Arun Vijay speech | Filmibeat Tamil
முடியாமல் போனது

முடியாமல் போனது

மேலும், விஜய் ஆண்டனினை வைத்து நாக்க முக்க என்ற நகைச்சுவை படத்தை பல வருடங்களுக்கு முன் எடுக்கத் திட்டமிட்டு இருந்தேன், ஆனால் அது முடியாமல் போனது. இம்முறை நான் எழுதி உள்ள கதை விஜய் ஆண்டானிக்கு சரியானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அமுதன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

விரைவில் திரையில்

கோடியில் ஒருவன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு 14வது திரைப்படமாகும். இது தவிர்த்து தமிழரசன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அக்னி சிறகுகள், காக்கி படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமன்றி பிச்சைக்காரன் 2ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் ஆண்டனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X