Pichaikkaran 2 :பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ட்ரெயிலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் பிச்சைக்காரன் என்ற படம் கடந்த 2016ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில், தற்போது இந்தப்படத்தை நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு, அவர் தீவிர சிகிச்சையை எதிர்கொண்டார். இந்நிலையில் இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Actor Vijay Antony announced release date of Pichaikkaran 2 movie

பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு : நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முகம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியாகி சூப்பர்ஹிட்டடித்த படம் பிச்சைக்காரன். இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தன்னுடைய தாயின் உயிருக்காக, பிச்சை எடுக்கும் மகனை சசி காட்சிப் படுத்தியிருந்தார். இநத்ப் படத்தின் கதையமைப்பு மற்றும் இசை, பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்தை வெற்றிப்படமாக்கியது.

இந்தப் படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய் ஆண்டனி. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி, விஜய் ஆண்டனியே அந்தப் படத்தை இயக்கினார். இந்தப் படம் மூலம் ஹீரோவாக மட்டுமில்லாமல் இயக்குநர் அவதாரமும் எடுத்திருந்தார். படத்தில் ஆன்டி பிகிலி என்ற கான்செப்டையும் இணைத்து பிரமோஷன்களை செய்திருந்தார்.

இந்தப் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் என வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில பிரச்சினைகளை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் ஆண்டனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படம் வரும் மே மாதம் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Actor Vijay Antony announced release date of Pichaikkaran 2 movie

இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை துவக்கிய விஜய் ஆண்டனி, தொடர்ந்து நான், சலீம் என வித்தியாசமான கதைக்களத்தில் படங்களில் நடித்து வந்த நிலையில், அவரது கேரியரில் சிறப்பாக கைக்கொடுத்த படங்களில் பிச்சைக்காரன் படத்திற்கு முதன்மையான இடம் உண்டு. இந்தப் படத்தின் வெற்றிதான் தற்போது இதன் இரண்டாவது பாகத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் துவங்கியது முதல் பல்வேறு பிரச்சினைகளை விஜய் ஆண்டனி சந்தித்துள்ளார்.

மலேசியாவில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்தபோதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டு, மூக்கு, தாடை போன்ற இடங்களில் அடிபட்டு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து தான் குணமடைந்ததாக கூறி, படத்தின் சூட்டிங்கையும் தொடர்ந்த நிலையில், படத்தின் ரிலீசில் பிரச்சினைகள் ஏற்பட்டு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து, படத்தின் ரிலீசையும் அவர் அறிவித்துள்ளார். படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X