Vijay Antony: மீண்டு(ம்) வந்த விஜய் ஆண்டனி.. ஹிட்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ!

சென்னை: இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவங்கியவர் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் பிச்சைக்காரன் 2 படம் வெளியாகி சிறப்பாக அமைந்தது.

Actor Vijay Antony joins in Ratham movie audio launch and his Hitler movie motion poster released

அவரது சொந்த வாழ்க்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள சோகம் அவரை புரட்டிப் போட்டுள்ளது. என்ற போதிலும் தற்போது அவர் மீண்டும் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் ஹிட்லர் பட மோஷன் போஸ்டர் வெளியீடு: கடந்த 2005ம் ஆண்டில் சுக்ரன் என்ற படத்தின்மூலம்தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருந்தார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே கிழக்கு கடற்கரை சாலை படத்தில் கேமியோ ரோலில் நடித்து நடிகராகவும் அறிமுகமானார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்திருந்த நான் படம் 2012ம் ஆண்டில்தான் வெளியானது. இசையமைப்பாளராக தன்னை நிரூபித்த விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகராகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.

Actor Vijay Antony joins in Ratham movie audio launch and his Hitler movie motion poster released

விஜய் ஆண்டனி படங்களின் தலைப்புகள் அனைத்தும் வித்தியாசமாக ரசிகர்களை எளிதில் கவரும் வகையில் அமைந்து வருகின்றன. அந்த வகையில் இவரது பிச்சைக்காரன், பாகிஸ்தான், சைத்தான், எமன் என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கொலை படம் பரவலாக ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக இவரது ரத்தம் படம் ரிலீசாகவுள்ளது. படத்தை இயக்குநர் அமுதன் இயக்கியுள்ளார்.

Actor Vijay Antony joins in Ratham movie audio launch and his Hitler movie motion poster released

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் அரங்கேறியுள்ளது. அவரது மூத்த மகள் மீரா, மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அனைத்து தரப்பினரும் விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சோகத்திலிருந்து தற்போது வெளிவந்துள்ளார் விஜய் ஆண்டனி.

Actor Vijay Antony joins in Ratham movie audio launch and his Hitler movie motion poster released

அக்டோபர் 6ம் தேதி இவரது ரத்தம் படம் ரிலீசாகவுள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் தன்னுடைய இளையமகள் லாராவுடன் கலந்துக் கொண்டார் விஜய் ஆண்டனி. நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறு வயதிலிருந்து அதிகமான பிரச்சினைகளை சந்தித்து மரத்து போனதுபோல மாறிவிட்டதாகவும் மற்றவர்களை மகிழ்விப்பது ஒன்றையே தற்போது நோக்கமாகவும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நம் வாழ்க்கையே ஞாபகம்தான் என்பதால் எதையும் மறக்க முயற்சிக்கவில்லை என்றும் வலி ஏற்பட்டால்கூட அந்த வலியோடு வாழ நினைப்பதாகவும் கூறியுள்ளார். இதனிடையே அவரது அடுத்தப்படமான ஹிட்லர் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ரியா சுமன், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, சரண்ராஜ், விவேக் பிரசன்னா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தை தனா எழுதி இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X