Actor Vijay Antony: பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கங்க.. பெண்கள் உடை குறித்து விஜய் ஆண்டனி கூல்!
கோவை: நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பிச்சைக்காரன், கொலை, ரத்தம் என அதிரடி கதைகளில் நடித்துவந்த விஜய் ஆண்டனி தற்போது ரொமாண்டிக் காமெடி ஜானரில் நடித்துள்ளார். ரோமியோ என்ற அந்தப் படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே தற்போது இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி மற்றும் மிர்ணாளினி ரவி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் அப்பாவி கேரக்டரில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

நடிகர் விஜய் ஆண்டனி: விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் குறைந்த இடைவெளிகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன/ அவரது பிச்சைக்காரன் 2. கொலை. ரத்தம் படங்களை தொடர்ந்து தற்போது ரோமியோ படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது/ இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்ணாளினி ரவி நடித்துள்ளார். படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். யூடியூபில் காதல் டிஸ்டன்ஸ் என்ற தொடரை இயக்கிய இயக்குனர் விநாயகர் வைத்தியநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பரத் தனசேகர் இசையமை ப்பில் இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாக விஜய் ஆண்டனி தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரோமியோ படம் ரிலீஸ்: படப்பிடிப்பு மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி மற்றும் மகாபலிபுரம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியான சூழலில் அதில் முதலிரவு அறையில் பால் சொம்புடன் விஜய் ஆண்டனி அப்பாவியாக உட்கார்ந்து இருக்க, பக்கத்தில் மது பாட்டிலுடன் மிர்ணாளினி ரவி இருப்பதாக காணப்பட்டது. இந்தப் போஸ்டர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த சூழலில் படம் ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர் விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பு: படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய படத்தின் இயக்குனர் விநாயகர் வைத்தியநாதன் தான் இந்த படத்தின் கதையை விஜய் ஆண்டனியை மனதில் வைத்து உருவாக்கியதாகவும் ஆனாலும் அவர் இதுவரை ரொமாண்டிக் காமெடி ஜானரில் நடித்ததில்லை என்பதால் இந்த படம் அவருக்கு பிடிக்குமா என்ற சந்தேகத்துடன் அவரிடம் கதையை சொன்னதாகவும் ஆனால் கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து போய் உடனடியாக படத்தை தானே தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹாப்பி ஸ்ட்ரீட் குறித்து விஜய் ஆண்டனி: இந்நிலையில் இன்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஜய் ஆண்டனி, இந்த படத்தின் கதை, இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் பல்வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டனர். ஹாப்பி ஸ்ட்ரீட் குறித்து நடிகர் ரஞ்சித்தின் கருத்து குறித்தும் விஜய் ஆண்டனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உங்களுக்கு பார்க்க பிடிக்கவில்லை என்றால் கண்ணை மூடிக்கொள்ளுங்கள் என்றும் விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











