விவசாயிகளை என்னைக்குமே மதிக்கணும்... சொல்கிறார் விஜய் ஆண்டனி
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் இசையமைப்பாளராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி, விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களின் குழந்தைகளின் நலனுக்காகவும் தினமும பிரார்த்தனை செய்து கொள்வார் என்பது பெரும்பாலோனர் அறியாதது.
விஜய் ஆண்டனி படம் அப்படின்னாளே அதுல ஒரு கிளாஸ் இருக்கும், மாஸும் இருக்கும். அவர் ஒரு வித்தியாசமான நடிகர். அவருக்குன்னு ஒரு தனிப்பட்ட கூட்டத்தை அவரே சேர்த்து கிட்டார். இசை அமைப்பாளராக இருந்தவர் ஒரு மிகப் பெரிய மாஸ் ஹீரோ ஆவாரு அப்படின்னு யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டாங்க.

ஆனா ஹீரோவா ஆவதற்கு தேவையான எல்லா முயற்சிகளிலும் ரொம்ப தீவிரமா இருந்தாரு. அதுக்காக நிறைய மெனக்கெடவும் செய்தார். ரசிகர்கள் எதிர்பார்க்கிறது, அவரோட சிம்பிளான ரொம்ப ஸ்டைலான ரொம்ப சாஃப்ட் வாய்ஸ்ல பேசறது தான்.
சமீப காலமாகவே விஜய் ஆண்டனி அவருடைய ரசிகர்களுக்கு சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களை சொல்லிக் கொண்டே இருக்கிறார். இப்ப கூட ரீசண்டா அவருடைய நண்பர்கள் கிட்ட அவர் பகிர்ந்துகொண்டது என்னன்னா விவசாயிகளை என்னைக்குமே மதிக்கணும் அப்படிங்கறது தான்.
ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா இணைய தளங்கள் மூலமா, அவர் சொல்வது இதைத்தான்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைப்பட ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஆடியோ பொறியாளர் எனும் பல்வேறு பரிமாணங்களில் பெயர் பெற்றவர் விஜய் ஆண்டனி.
திரில்லர், அதிரடி படங்களில் நடிக்கும் விஜய் ஆண்டனிக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை உண்டு. அவர் தனது படங்களில் பல்வேறு விஷயங்களை சமூக அக்கறையோடு சுட்டிக்காட்டுவார். அவருக்கு விவசாயிகள் மீதும் மிகுந்த அக்கறை உண்டு.
இன்று விவசாயிகள் தங்களுடைய வேர்வையை சிந்தி மற்றவர்களுடைய பசியை போக்குவதற்காக உழைக்கின்றனர். ஆனால் அவர்களால் தங்களுடைய சொந்த குடும்பத்தையே தங்களால் காப்பாற்ற முடியாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளை மதிக்கும் விஜய் ஆண்டனி தன் உணவை சாப்பிடும் முன் கடவுளிடம் அந்த உணவு எந்த பூமியிலிருந்து வந்ததோ அந்த பூமியைக் காக்கும் விவசாயிகளுக்காகவும், அவர்களது குழந்தைகளுக்காகவும் விஜய் ஆண்டனி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்வாராம். காரணம் மக்களுக்கு உணவு கொடுக்கும் அந்த குடும்பம் என்றைக்கும் பட்டினியாக மட்டும் இருக்கவே கூடாது என்று கடவுளிடம் வேண்டுகோள் வைப்பார் என்று கூறுகின்றனர் அவருடைய நெருங்கிய நண்பர்கள்.


Click it and Unblock the Notifications











