Pichaikkaran 2 :நேத்து நைட் கனவுல.. வெளியானது பிச்சைக்காரன் 2 படத்தின் க்யூட் பாடல்!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே இயக்கியுள்ளார்.
முன்னதாக சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் அம்மா சென்டிமெண்ட் சிறப்பாக பேசப்பட்ட நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தில் அண்ணன் -தங்கை சென்டிமெண்ட் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போன நிலையில், தற்போது படம் வரும் 19ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி வெளியிட்ட பிச்சைக்காரன் 2 படத்தின் பாடல் : நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2016ம் ஆண்டில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹட்டடித்தது. இந்தப் படத்தில் அம்மா சென்டிமெண்டை மையமாக கொண்டு கதைக்களம் உருவாகியிருந்தது. தன்னுடைய அம்மாவின் உடல்நலனுக்காக பிச்சை எடுப்பதாகவும் அதற்காக மற்றவர்களிடம் இருந்து மறைந்து வாழ்வதாக கதை காணப்பட்டது.
வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை சந்தித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. விஜய் ஆண்டனிக்கும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் 7 ஆண்டுகளை கடந்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.
இதனிடையே தற்போது மே மாதம் 19ம் தேதி இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் அடுத்தப் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடியில பேயி ஒண்ணு படுத்திருக்கறத பார்த்தேன் என்று துவங்கும் அந்தப் பாடலின் வரிகளை விஜய் ஆண்டனி முன்னதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்தப் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. குத்துப்பாட்டாக வெளியாகியுள்ள இந்தப் பாடலில், விஜய் ஆண்டனி உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு அவர் மருததுவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் அண்ணன் -தங்கை சென்டிமெண்ட்டை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. முதல் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனிடையே இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டிவந்த விஜய் ஆண்டனி இந்தப் படத்தின்மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். அவர் அடுத்தடுத்த படங்களை இயக்குவாரா என்பதை இந்தப் படத்தின் வெற்றி தீர்மானிக்கும்.


Click it and Unblock the Notifications











