பயப்பட சொல்லும் விஜய் ஆண்டனி.. இன்று வெளியாகும் பிச்சைக்காரன் 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
சென்னை : இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன் தற்போது இயக்குநராகவும் மாறியுள்ளார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி நடிப்பில் சிறப்பான பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள நிலையில், அவரது கேரியர் பெஸ்ட்டாக பிச்சைக்காரன் படம் வெளியாகி ஹிட்டித்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகத்தான் தன்னுடைய கேரியரை சினிமாவில் துவங்கினார். இவரது பாடல்களில் துள்ளலிசைப் பாடல்கள் அதிகமாக இருந்தாலும் மெலடியும் சிறப்பான பல பாடல்களை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் இவர் பணிபுரிந்த நிலையில், தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின்மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார்.

விஜய் ஆண்டனி படங்களின் பட்டியல்
நான் படத்தின்மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் ஆண்டனி, தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் படம் ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து அதிகமான படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. காக்கி, அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம், வள்ளி மயில் இவரது படங்களின் பட்டியல் நீண்டுள்ளது.

பிச்சைக்காரன் 2 படம்
அந்த வகையில் முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை விஜய் ஆன்டணியே இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கின்போதுதான் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆன்டி பிகிலி யார் தெரியுமா?
இதனிடையே இந்தப் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாவதை தொடர்ந்து படத்தின் ப்ரமோஷன் பணிகளை விஜய் ஆண்டனி துவங்கியுள்ளார். முன்னதாக படத்தின் சூட்டிங் துவ்ஙகியபோதே பிகிலி என்ற கேரக்டரை பிரதானப்படுத்தி பிரமோஷன்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து விஜய் ஆண்டனி நான் தான் ஆன்ட்டி பிகிலி என்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் தெரிவித்து ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டினார்.

பிச்சைக்காரன் 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
இதனிடையே இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ள விஜய் ஆண்டனி, பிக்கிலி யார் என்பதையும் தற்போது புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொஞ்சம் கவலைப்படுங்க, முடிஞ்சா பயப்படுங்க என்று கூறியுள்ள விஜய் ஆண்டனி, இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ள படத்தின் பர்ஸ்ட் சிங்கிளில் இந்த கேரக்டர் குறித்து அதிகமாக சொல்வதாகவும் கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி தயாரிப்பில் பிச்சைக்காரன் 2
நடிகர் விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் பிச்சைக்காரன் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் காவியா தப்பார், ராதாரவி, மன்சூர் அலிகான், ஹரீஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை காட்டி வருகின்றனர். பிச்சைக்காரன் படம் கமர்ஷியலாக வித்தியாசமான கதையில் ரசிகர்களை அணுகிய நிலையில், பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்கும் என்று அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











