Vijay Antony: பிரம்மாண்டமாக உருவாகும் பிச்சைக்காரன் 3.. பட்ஜெட் இவ்வளவு கோடியா?

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை சினிமாவில் துவங்கிய நிலையில், தற்போது அடுத்தடுத்த கட்டங்களில் சிறப்பான பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என அடுத்தடுத்த கட்டங்களில் பயணம் செய்து வெற்றிகளை குவித்த விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின்மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது.

Actor Vijay Antonys Pichaikkaran 3 movie update released and movie planned in heavy budget

பிச்சைக்காரன் 3 படத்தின் அப்டேட்: நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவே தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவக்கினார். தொடர்ந்து பல படங்களில் இவரது துள்ளலான பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் பாடல்கள் மட்டுமில்லாமல் பிஜிஎம்மிலும் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தினார் விஜய் ஆண்டனி. இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தினார். சலீம் உள்ளிட்ட இவரது ஆரம்பகால படங்கள் த்ரில்லர் ஜானரில் வெளியாகி ரசிகர்களுக்கு சிறப்பான அனுபத்தை கொடுத்தன.

தொடர்ந்து கமர்ஷியல் ஹீரோவாகவும் தன்னை வெளிப்படுத்தினார் விஜய் ஆண்டனி. இவரது காளி உள்ளிட்ட படங்கள் இவரை வேறு மாதிரியாக வெளிப்படுத்தின. தொடர்ந்து தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் தன்னுடைய படங்களில் செயல்பட்டார் விஜய் ஆண்டனி. தன்னுடைய படங்களுக்கு மட்டும் இசையமைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த அளவிற்கு தன்னுடைய படங்களில் இவர் பிசியாக காணப்பட்டார்.

இந்நிலையில் தற்போது இவர் பிச்சைக்காரன் 2 படத்தின்மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது பிச்சைக்காரன் படம். இந்தப் படம் விஜய் ஆண்டனி கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் சசி வேறு படத்தில் கமிட்டாகியிருந்ததால் படத்தை தானே இயக்கினார்.

Actor Vijay Antonys Pichaikkaran 3 movie update released and movie planned in heavy budget

சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் இநத்ப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், மலேசியாவில் நடந்த சூட்டிங்கின்போது, விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவர் தீவிர சிகிச்சைக்கு உட்பட்டு, மீண்டும் படத்தின் சூட்டிங்கை துவங்கினார். இதனிடையே இந்தப் படம் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் கடந்த மே மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்தப் படம் இரு மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும் முயற்சியும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படத்தின் சூட்டிங் வரும் 2025ம் ஆண்டில் துவங்கவுள்ளதாகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X