உடல்நிலை தேறியுள்ளது.. கைவிரலை உயர்த்திக் காட்டி ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன விஜய் ஆண்டனி!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தையடுத்து சீரியசான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இயக்குநர் சுசீந்திரன் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான் தேறி வருவதாக நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி, இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய நிலையில், தன்னுடைய பாடல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனிடையே நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தன்னுடைய பன்முகத் திறமை மூலம் ஏராளமான ரசிகர்களை அவர் கட்டிப் போட்டு வருகிறார்.

பிச்சைக்காரன் 2 படம்
இந்நிலையில் அவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது அவர் இயக்கி வந்தார். பிச்சைக்காரன் படம் அவரது கேரியரில் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற நிலையில், அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை அவர் இயக்கி வந்தார்.

மலேசியாவில் விபத்து
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த சூட்டிங்கின்போது விஜய் ஆண்டனி ஸ்கை ஜெட் ஓட்டியபோது அவருக்கு மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவரது முகத்தில் மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.

விஜய் ஆண்டனிக்கு தீவிர சிகிச்சை
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு முகத்தில் பெரிய அளவில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரது சிகிச்சை குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் இருந்தது. இதுகுறித்து பிரபல இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

ரசிகர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனியின் உடல் நிலை தேறியுள்ளதாகவும், அவர் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் விரைவில் அவர் ரசிகர்களிடம் பேசுவார் என்றும் சுசீந்திரன் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜய் ஆண்டனி, தற்போது தனது ட்விட்டரில் ரசிகர்களிடையே பேசியுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி
தனக்கு மலேசியாவில் நடந்த சூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு தற்போது பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தான் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி, விரைவில் தான் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். ரசிகர்களின் ஒத்துழைப்பு மற்றம் கரிசனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











