மகாராஜா படத்தில் நடிக்கவிருந்த விஜய் ஆண்டனி.. விடாப்பிடியாக பிடித்துக் கொண்ட விஜய் சேதுபதி!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியாகியுள்ளது மகாராஜா படம். துவண்டிருந்த விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் மிகப்பெரிய கம் பேக்காக அமைந்துள்ளது. முன்னதாக குரங்கு பொம்மை படம் மூலம் கவனம் பெற்ற நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் கதைக்களம், திரைக்கதை உள்ளிட்டவை சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன. இதேபோல இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகளுக்கிடையிலான அன்பு, பாசம் ஆகியவையும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நட்ராஜ், அபிராமி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி, நடராஜ், அபிராமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மகாராஜா. கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கடந்த மூன்று நாட்களிலேயே 32 கோடி வசூலை சர்வதேச அளவில் மகாராஜா படம் ஈட்டியுள்ளது. ரசிகர்களை ஈர்த்து இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் சூழலில் விரைவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் படம் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. நிதிலன் சாமிநாதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
விஜய் ஆண்டனி விருப்பம்: இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியும் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக தற்போது தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். பேஷன் ஸ்டுடியோவிற்கு கதையை கூறிய நிதிலன் சாமிநாதன், தொடர்ந்து தனஞ்செயனுக்கும் கதையை கூறியதாகவும் இந்தக் கதை அவரை மிகச்சிறப்பாக ஈர்த்த நிலையில் அவர் உடனடியாக ஓகே சொல்லி விஜய் ஆண்டனி ஹீரோவாக பிக்ஸ் செய்ததாகவும் தனது சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார். படத்தில் நடிக்க விஜய் ஆண்டனியும் மிகவும் விருப்பம் காட்டியதாகவும் உடனடியாக படத்தை ஒப்பந்தம் செய்ய அவர் தயாரானதாகவும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
தனஞ்செயன் பேட்டி: இதனிடையே, முன்னதாக பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இந்த கதையை கூறி அட்வான்ஸ் வாங்கிய விஷயத்தை நிதிலன் தன்னிடம் கூறிவிட்டு, அவர்களிடம் என்ஓசி வாங்கி வருவதாக கூறிச் சென்றதாகவும் தனஞ்செயன் குறிப்பிட்டார். இதையடுத்து தொடர்ந்து தாங்கள் இந்த கதையை எடுத்துக் கொள்வதாக பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனர் சுதனிடம் தனஞ்செயன் பேசிய நிலையில் அவர் கதையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியை தாங்கள் ஹீரோவாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவரிடம் பேசிப் பார்த்துவிட்டு அவர் நடிக்கவில்லை என்றால் விஜய் ஆண்டனியை இந்த கதையில் நடிக்க வைக்கலாம் என்றும் சுதன் கூறியதாக தனஞ்செயன் மேலும் கூறியுள்ளார்.
உடனடியாக ஓகே சொன்ன விஜய் சேதுபதி: ஆனால் இந்த கதையை கேட்டவுடன் விஜய் சேதுபதி உடனடியாக ஓகே சொன்னதால் எந்த விஷயமும் தாங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் தனஞ்செயன் வருத்தம் தெரிவித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் வெளியாகி அவரது 50வது படமாக திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி படமாகவும் மாறியுள்ளது. முன்னதாக இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க இருந்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











