பணம் உலகை காலி பண்ணிடும்.. பிச்சைக்காரன் 2 ட்ரெயிலர் குறித்து அறிவித்த விஜய் ஆண்டனி!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகிவரும் படம் பிச்சைக்காரன் 2.
இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் மிரட்டியது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய் ஆண்டனி இயக்கியுள்ளார்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
சுசி கணேசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி லீட் கேரக்டரில் நடித்து கடந்த 2016ம் ஆண்டில் வெளியானது பிச்சைக்காரன் படம். உடல்நல பாதிப்பால் படுத்த படுக்கையாக மாறும் தன்னுடைய தாயின் உடல்நலத்தை மீட்டெடுக்க அவரது மகன் பிச்சை எடுப்பதாக அந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.

கேரியர் பெஸ்ட் படம்
ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் இந்தப் படம் பெற்றது. நடிகர் விஜய் ஆண்டனியின் கேரியரில் இந்தப் படம் மிகபெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

பிச்சைக்காரன் 2 படம்
இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், மலேசியாவில் நடைபெற்ற படத்தின் சூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விஜய் ஆண்டனிக்கு விபத்து
அவரது முகம், மூக்கு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதிலிருந்து மீண்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பிச்சைக்காரன் 2 படத்தின் சூட்டிங்கில் மீண்டும் இணைந்தார் விஜய் ஆண்டனி. இதனிடையே தற்போது படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

நாளை வெளியாகும் ட்ரெயிலர்
அதன்படி நாளை மாலை 5 மணிக்கு படத்தின் ஸ்னீக் பீக் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பணம் உலகை காலி பண்ணிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











