Vijay Antony: வெளியானது வள்ளிமயில் டீசர்.. விஜய் ஆண்டனியுடன் மல்லுக்கு நிற்கும் சத்யராஜ்!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கொலை படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் சத்யராஜ், பாரதிராஜா பிரியா அப்துல்லா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாகவும் சத்யராஜ் போராளியாகவும் நடித்துள்ளனர். தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் ஆண்டனி: நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கினாலும் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகத்திறமையை கோலிவுட்டில் வெளிப்படுத்தி வருகிறார். தன்னுடைய படங்களில் தானே இசையமைத்தும் வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடிப்பில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வெளியான ரத்தம், கொலை போன்ற படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன.
வள்ளி மயில் படம்: இந்நிலையில் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் வள்ளி மயில். இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்தில் சத்யராஜ், பாரதிராஜா, சுனில், கயல் தேவராஜ், பிரியா அப்துல்லா, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். நல்லு சாமி பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படம் 1980களில் புகழ்பெற்ற வள்ளித் திருமணம் நாடகத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி: பிரம்மாண்டமான வகையில் மிகுந்த பொருட்செலவுடன் உருவாகிவரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாகவும் சத்யராஜ் போராளியாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளது தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலம் தெரிகிறது.

மீண்டும் இணைந்த கூட்டணி: முன்னதாக விஜய் ஆண்டனி -சுசீந்திரன் கூட்டணி பிச்சைக்காரன் படத்தில் இணைந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொடைக்கானல், பழனி, மதுரை, சிறுமலை பகுதிகளிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.
த்ரில்லர் படம்: படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதா இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள டீசர் மிரட்டலான வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. படம் புதுமையான த்ரில்லர் படமாக உருவாகியுள்ள நிலையில் விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











