விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறுதிசடங்கு..கண்ணீரில் நனைந்த இறுதி ஊர்வலம்!

சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் ஊர்வலமாக தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திரைத்துறையில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இவருக்கு 2 மகள்கள். இதில், மூத்த மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

Actor Vijay Antonys daughter Meeras body was carried in a flower decorated carriage

விஜய் ஆண்டனி மகள்: சர்ச் பார்க் பள்ளியில் படித்து வந்த மீரா நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் வழக்கம்போல பேசிவிட்டு படுக்கை அறைக்கு உறங்க சென்ற மீரா, அதிகாலை 3 மணியளவில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் ஆண்டனி, தனது மகளின் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

கதறி அழுத விஜய் ஆண்டனி: இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் ஆண்டனி கதறி அழுது, உதவியாளர் உதவியுடன் மகளை மீட்டு கீழே இறக்கி, அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, மீராவின் உடல் ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, உடல் விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரபலங்கள் அஞ்சலி: இதையடுத்து மீராவின் உடல் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விஜய் அவர்களின் தாய் சோபா, பார்த்திபன், நடிகர் சித்தார்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு நேரடியாக வந்து அவருக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளனர்.

இறுதி ஊர்வலம்: இதையடுத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித தெரசா தேவாலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தற்போது தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி செய்யப்பட்டு வருகிறது. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் நடைபெறும் இந்த திருப்பலி முடிந்தவுடன் காலை 10.30 மணி அளவில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

விஜய் ஆண்டனி மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்களின் புகைப்படங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X