Actor Vijay Antony: ரிலீசுக்கு தயாராகும் மழை பிடிக்காத மனிதன்.. டீசர் ரிலீஸ் அறிவிப்பு இதோ!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து குறுகிய இடைவெளிகளில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். தன்னுடைய சொந்த தயாரிப்பிலும் மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் மில்டன் இயக்கத்தில் நீண்ட காலங்களாக ரிலீசுக்கு தயாராகிவரும் மழை பிடிக்காத மனிதன் படம் குறித்து தற்போது அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார்.

படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ள விஜய் ஆண்டனி, படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள சூழலில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்களும் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Actor Vijay Antony s Mazhai pidikkatha Manithan movie is gearing up for the release

நடிகர் விஜய் ஆண்டனி: நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்கள் குறைந்த இடைவெளிகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அவரது ரோமியோ படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது விஜய் ஆண்டனி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பேசியுள்ளார்.

மழை பிடிக்காத மனிதன் ரிலீஸ்: விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டீசர் குறித்தும் அவர் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளார் இந்த படத்தின் டீசர் வரும் 29ம் தேதி ரிலீசாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம். படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். விஜய் மில்டன் எழுதி இயக்கியுள்ள இந்த படம் ஆக்ஷன் மற்றும் கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டாமன் மற்றும் டையு பகுதிகளில் இந்த படம் அதிக அளவில் படமாக்கப்பட்ட சூழலில் அங்கு படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்ற பெருமையும் படத்திற்கு கிடைத்துள்ளது.

விரைவில் ரிலீஸ்: நீண்ட நாட்களாக இந்த படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்ட சூழலில் விரைவில் இந்த படம் ரிலீசாகவுள்ளது விஜய் ஆண்டனியின் ரசிகர்களை வெகுவாக உற்சாகம் கொள்ள செய்துள்ளது. வித்தியாசமான முறையில் இந்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்தை நடிக்க வைக்க விஜய் மில்டன் முயற்சி மேற்கொண்ட நிலையில், அவரது மறைவையடுத்து படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் நடித்துள்ளதாக கூறப்பட்டது.

விஜய் ஆண்டனி இசை: ஆனால் முன்னதாக விஜய் மில்டன் இதை மறுத்திருந்தார். விஜய் ஆண்டனியின் நடிப்பில் கடந்த மாதத்தில் ரோமியோ படம் வெளியான நிலையில், அடுத்தடுத்து அக்னி சிறகுகள், காக்கி, வள்ளிமயில், ஹிட்லன், மழை பிடிக்காத மனிதன் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் மழை பிடிக்காத மனிதன் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள சூழலில், பின்னணி இசையை அச்சு ராஜாமணி மேற்கொண்டுள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X