ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்.. அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் நடிகர் விஜய்!
சென்னை: வரி விலக்கு கோரிய வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார்.
இந்த காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

விஜய் மனு தள்ளுபடி
அந்த மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் வரி என்பது நன்கொடையல்ல கட்டாய பங்களிப்பு எனக்கூறி நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

ரியல் ஹீரோக்கள்
மேலும் நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.

வைரலான பில்
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. மேலும் நடிகர் விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பு வரி செலுத்திய பில்களும் வைரலாயின.

விஜய்க்கு மன வருத்தம்
வரி விலக்கு வழக்கில் நீதிபதி இவ்வளவு காட்டமாக பேச வேண்டிய தேவையில்லை என்றும் கருத்துக்கள் எழுந்தன. நீதிபதியின் கடுமையான கருத்துக்களால் நடிகர் விஜய் மன வருத்தத்தில் இருந்ததாகவும் இதனை சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.
Recommended Video

திங்கட்கிழமை விசாரணை
இந்நிலையில் வரி விலக்கு கோருவது குடிமக்களின் உரிமை என்பதால் தீர்ப்பை எதிர்த்தும் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











