என்னது அதுக்குள்ள மெர்சல் படம் வெளியாகி 5 ஆண்டு ஆயிடுச்சா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய் -இயக்குநர் அட்லீ கூட்டணியில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான படம் மெர்சல்.

தெறி படத்தை தொடர்ந்து விஜய் -அட்லீ கூட்டணியில் வெளியான இந்தப் படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்தப் படம் அதை பூர்த்தி செய்தது.

இந்தப் படம் வெளியாகி இன்றைய தினம் 5 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையொட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கொண்டாட்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மாஸ் ஹீரோ விஜய்

மாஸ் ஹீரோ விஜய்

நடிகர் விஜய் ஏராளமான ரசிகர்களின் கனவு நாயகனாக மாஸ் ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. பொங்கலுக்கு ரிலீசாக உள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் வம்சி படிப்பள்ளி.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

முன்னதாக தோழா என்ற ஆத்மார்த்தமான படைப்பை தமிழில் கொடுத்துள்ள வம்சி படிப்பள்ளி தற்போது குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்தே வாரிசு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒருபுறம் டப்பிங் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

 லோகேஷுடன் இணையும் விஜய்

லோகேஷுடன் இணையும் விஜய்

இந்தப் படம் விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது. இதனிடையே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தின் அறிவிப்பு தீபாவளியை அடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் -விஜய் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது தளபதி67 படத்திற்கு மிகவும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

5 ஆண்டுகளை கடந்த மெர்சல்

5 ஆண்டுகளை கடந்த மெர்சல்

இதனிடையே இன்றைய தினம் விஜய்யின் மெர்சல் படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படம் வெளியாகி இன்றைய தினம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். படத்தின் பல்வேறு சுவாரஸ்யங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் -அட்லீ கூட்டணி

விஜய் -அட்லீ கூட்டணி

கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ரிலீசான இந்தப் படத்தை தொடர்ந்து தெறி படத்தை அட்லீ இயக்கியிருந்தார். தெறி படத்தின் அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்திற்கு மிகவும் அதிகமான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த கூட்டணி அதை நிவர்த்தி செய்து ரசிகர்களை வெகுவாக திருப்தி செய்தது.

விஜய்யுடன் நடிக்கவிருந்த ஜோதிகா

விஜய்யுடன் நடிக்கவிருந்த ஜோதிகா

இந்தப் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் நித்யா மேனன் விஜய்க்கு ஜோடி சேர்ந்திருந்தார். இதனிடையே முன்னதாக இந்தக் கேரக்டருக்காக ஜோதிகாவிடம் பேசப்பட்டதாகவும் ஆனால் கதையில் சில இடங்களில் நடிக்க அவருக்கு உடன்பாடு இல்லாததால் அவர் இந்தப் படத்தை மறுத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

தற்போது இந்தப் படத்தின் 5 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி காமன் டிபியையும் ரசிகர்கள் டிசைன் செய்துள்ளனர். படத்தின் #5yearsofBBMersal என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகின்றன. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் ஆளப்போறான் பாடல் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றன. மற்ற பாடல்களும் சிறப்பாக அமைந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X