Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Hatred தலையெல்லாம் காவி.. குட்டி ஸ்டோரிய வச்சு நல்லா ஊம குத்து குத்துறாருய்யா தளபதி!
சென்னை: மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ள நிலையில் ஹேட்டர்ஸ் என குறிப்பிடும் இடத்தில் எல்லாம் தலையில் காவி பூசிய கார்ட்டூன்கள் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். வில்லனாக முன்னனி நடிகரான விஜய் சேதுபதி நடிக்கிறார்.

சிங்கிள் ட்ராக்
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கதாநாயகனான நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டார். லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி என தொடங்குகிறது அந்த பாடல்.

பேராசிரியர்
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் இப்பாடல் மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ் செய்வது போல் அமைந்துள்ளது. இந்த சிங்கிள் ட்ராக் லிரிக்ஸ் மற்றும் கார்ட்டூன் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் ஒய் திஸ் கொல வெறி பாடலில் இடம் பெற்றுள்ளதை போன்று ஏராளமான ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ஹேட்டர்ஸ்..
விஜய்க்கு எதிரே இருப்பவர்களுக்கு தலையில் காவி நிற கலர் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Haters are gonna hate but ignore calmly என்ற வரி இடம் பெறும் இடத்தில் கார்ட்டூன் தலையில் காவியடிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசைன் டிசைனா பிராப்ளம்ஸ் வரும்.. கொஞ்சம் சில் பண்ணு மாப்பி என என்ற வரிகளும் இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கிறது.

ஏழாம் பொருத்தம்
கார்ட்டூன்களின் தலையில் காவி அடிக்கப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் அரசியல் ரீதியாக பார்த்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கும் பாஜகவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. மெர்சல் படத்தின் போதும் பாஜகவும் விஜய்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவின் விமர்சனங்களுக்கு ஆளானார் விஜய்.

வீடுகளில் ரெய்டு
சமீபத்தில் கூட வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் படப்பிடில் இருந்த நடிகர் விஜயை நேரடியாக கையிலேயே சம்மன் கொடுத்த விசாரணை நடத்தினர். நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளிலும் 2 நாட்கள் விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

அதிகரிக்கும் விரிசல்
போதா குறைக்கு நெய்வேலியில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்த விஷயம் தமிழக திரைத்துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நடிகர் விஜய் தரப்புக்கும் பாஜகவுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது.

நேரடியாக தாக்கிய விஜய்
நடிகர் விஜயும் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தின் பலத்தை காட்ட படப்பிடின் இறுதி நாளில் பஸ் மீது ஏறி நின்று செல்பி எடுத்தார். அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று வெளியான ஒரு குட்டி ஸ்டோரி பாடலின் பல வரிகளின் மூலம் பாஜகவை நேரடியாகவே தாக்கியிருக்கிறார்.