பலாத்காரம் செய்யவில்லை… எல்லாம் பொய்… ஃபேஸ் புக் லைவ்வில் கதறிய நடிகர் !

கேரளா : பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை கூறிய புகாருக்கு பிரபல நடிகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

லிப்ஸ் அண்ட் த மங்கி பென், பெருச்சாழி, ஆடு , முத்துகவு, ஆடு 2 மற்றும் ஹோம் ஆகிய படங்களைத் தயாரித்து நடித்து பிரபலமானவர் விஜய் பாபு

இவர் ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

ஏப்ரல் 22-ம் தேதி விஜய் பாபு மீது கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விஜய்பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

ஏமாற்றி பலாத்காரம்

ஏமாற்றி பலாத்காரம்

சினிமா துறையில் எனக்கு யாரையும் தெரியாது, இதனால், விஜய் பாபு, சினிமா படவாய்ப்பு குறித்து அறிவுரைகளை கூறி நட்பாக பழகினார். இதனால், அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அவர் என்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தார். நான் சுயநினைவுடன் இருந்தால், உடலுறவுக்கு சம்மதிக்க மாட்டேன் என்பதால், மது மற்றும் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார்.

நிர்வாண வீடியோ

நிர்வாண வீடியோ

இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், நிர்வான வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினார். இதனால், நான் பயந்து இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்தேன். எர்ணாகுளம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எல்லாமே பொய்

எல்லாமே பொய்

இந்நிலையில், விஜய்பாபு பேஸ் புக் லைவ்வில், அந்த நடிகையை தனக்கு 2018-ம் ஆண்டு முதல் தெரியும் என்றும் ஆடிஷனில் தேர்வானதால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் நடித்துள்ளார். அந்த நடிகை சொல்வது எல்லாம் பொய், நான் அவரை பலாத்காரம் செய்யவில்லை. பாதிக்கப்பட்டது அந்த நடிகை இல்லை நான் தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று பேஸ் புக் லைவ்வில் அழாத குறையாக கதறியபடி பேசினார்.மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை லைவ்வில் கூறியதற்காக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X