For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விஜய்யை செதுக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. அப்பாவை கண்டுகொள்ளாத விஜய்!

  |

  சென்னை : நடிகர் விஜய் இன்று மாஸ் ஹீரோவாக உருவாக காரணமாக இருந்தது அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான்.

  நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள்,நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  விஜய்யின் ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே காமன் டீபியை வெளியிட்டு இணையத்தை திணறடித்தனர்.மேலும், தளபதி 66 திரைப்படத்தின் போஸ்டரையும் , டைட்டிலையும் நேற்று படக்குழு வெளியிட்டதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

   ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் பெருமை இவர் தான்.. உச்சி குளிர்ந்த ப்ரியா பவானி ஷங்கர்! ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் பெருமை இவர் தான்.. உச்சி குளிர்ந்த ப்ரியா பவானி ஷங்கர்!

  குழந்தை நட்சத்திரமாக

  குழந்தை நட்சத்திரமாக

  குழந்தை நட்சத்திரமான ஒருசில படங்களில் நடித்து வந்த விஜய்.1992ஆம் ஆண்டு தனது 18 வயதில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். எஸ்..ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று பிளாப் ஆனது. முதல் படமே தோல்வியைத் தழுவியதால், மற்ற தயாரிப்பாளர்கள், விஜய்யை வைத்து படம் எடுக்க யோசித்தனர்.

  விஜயகாந்தால் மட்டுமே முடியும்

  விஜயகாந்தால் மட்டுமே முடியும்

  மகன் சினிமாவில் பிராகாசிக்க வேண்டும் என்று ஆசைபட்ட எஸ்.ஏ.சி. விஜயை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விஜயகாந்தால் மட்டுமே முடியும் என கூறி, விஜயகாந்தை சந்தித்து விஜய் உடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் பிறகு தான் செந்தூரபாண்டி திரைப்படம் உருவானது. எதிர்பார்த்தபடி விஜயின் முகம் தமிழக மக்களுக்கு இந்த படத்தின் வெற்றி மூலம் பரிட்சையமானது. ஆனால், விஜய்க்கு பெரிதாக படவாய்ப்பு வரவில்லை.

  ராசியில்லாத நடிகர்

  ராசியில்லாத நடிகர்

  இதனால், எஸ்.ஏ.சி தனது மகன் விஜய்யை வைத்து ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன் என தொடர்ந்து படங்களை இயக்கினார். அனைத்துப்படங்களும் தோல்வியைத் தழுவின. இதனால், விஜய் ராசியில்லாத நடிகர் என பெயர் எடுத்தார். விடாமுயற்சி விஸ்ரூப வெற்றி என்பது போல, சிவாஜியுடன் விஜய்யை ஒன்ஸ்மோர் படத்தில் இணைந்து நடிக்கவைத்து அதில் வெற்றியும் பெற்றார். ஒன்ஸ்மோர் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.

  பல போராட்டங்கள்

  பல போராட்டங்கள்

  பல போராட்டங்கள், சில வெற்றிகள், பல தோல்விகள் என பலவற்றை சந்தித்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென இரு இடத்தைப் பிடித்துள்ளார் விஜய். இத்தனை ஆண்டுகாலம் ஒரு ஹீரோவாக நிலைத்து நிற்கிறார் என்றால் அவரின் கடின உழைப்பும், சினிமாவின் மீது அவருக்கு இருக்கு அர்ப்பணிப்பு எனலாம். ஆனால், இவற்றை எல்லாம் விட மகனை அனுஅனுவாக செதுக்கி மாஸ் ஹீரோவாக்கிய பெருமை எஸ்.ஏ.சந்திரசேகரையே சேரும்.

  நிறைவேற்றுவாரா ?

  நிறைவேற்றுவாரா ?

  மகனின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜய்க்கு இடையே உருவான மனகசப்புகளால், அவர்கள் இருவரும் தற்போது பேசிகொள்வதில்லை. இதனால், மன வேதனையில் இருக்கும் எஸ்.ஏ.சி, சமீபத்தில் பேட்டி ஒன்றில், எனக்கு இருக்கும் பெரிய ஆசை, விஜய் மாதம் ஒரு முறையாக வீட்டிற்கு வந்து ஒரு அரை மணி நேரம் பேச வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த பிறந்த நாளில் இருந்தாவது அப்பாவைவின் ஆசையை விஜய் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.

  English summary
  Vijay Birthday special, Actor Vijay became a mass hero because of his father SA Chandrasekhar.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X