விஜய் பிறந்த நாள் பரிசு.. ரசிகர்கள் வெளியிட்ட 'அண்ணா' ஆல்பம் சாங் !

சென்னை : நான் திரைப்படத்தில் "தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடலின் மூலமாக திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஈழத்துக் கவிஞர் அஸ்மின்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரங்கல் பாடலான "வானே இடிந்ததம்மா" பாடலையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக அண்ணாத்த படத்தில் 'வர்ராரு வர்ராரு' என்ற பாடலை எழுதி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 'அண்ணா' எனும் பெயரில் பிரத்யேக பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விஜய் தீவிர ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே காமன் டீபிகளை வெளியிட்டு விஜய்யின் பிறந்த நாளை கொண்டாத் தயாராகிவிட்டனர்

பிறந்த நாள் ஸ்பெஷல்

இந்நிலையில், பாடலாசிரியர் ஈழத்துக் கவிஞர் அஸ்மின், விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 'அண்ணா' எனும் பெயரில் பிரத்யேக பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் சுயாதீன பாடலாக உருவாகியிருக்கும் இந்தப் பாடலை யுகே மாலா குமார் படைப்பகம் தயாரித்து வீடியோவாக வெளியிட்டுள்ளது.

அண்ணா பாடல்

அண்ணா பாடல்

இந்த பாடலை ஈழத்து பாடகர் கஜீபன் செல்வம், பின்னணி பாடகி ஸ்ரீநிதி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடலுக்கு சிந்துஜன் வெற்றிவேல் இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் விஜய்யின் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் பாடலாசிரியல் அஸ்மின் வார்த்தையில் ஜாலத்தை புகுந்தி உள்ளார்.

நாம் என்ற வார்த்தைகொண்டு உயர்ந்தார்

நாம் என்ற வார்த்தைகொண்டு உயர்ந்தார் "அண்ணா"

நாடெங்கும் வாழ்த்த நாளை

ஜெயிப்பார் "அண்ணா"

வா நண்பா தமிழரெல்லாம்

சேர்ந்தோமென்னா

வாடாத வாழ்க்கை இங்கே தருவாரண்ணா..

அடிமை வாழ்வு

போதும் போதும்

இனிமே நடக்க

இருக்கா ஏதும்...?

நாட்ட அழிச்சி

கூறு போடும்..

நரிகள் கூட்டம்

தெறித்தே ஓடும்...

ஊமையைப்போல்

நாமிருந்தா

ஊர்செழித்து

முன்னேருமா..?

பேரலைபோல்

எழ மறந்தா

பேரவலம்

தொடரும் அம்மா..

தமிழா தமிழா

பயந்து ஓடாதே...

தலைவன் தலைவன்

பிறந்தான் வாடாதே...

தடைகள் உடையும்

துயரம் தூளாகும்..

தயங்கி நின்றால்

விடிய நாளாகும்..


'நாளைய தீர்ப்பு'

தந்தவன் பின்னே

நாளைய தமிழகம்

எழுந்து நிற்போமே...

நாடி நரம்பு

உயிர் உணர்வெல்லாம்

தளபதி விஜய்க்கே

என்றுரைப்போமே...

கவலை யாவும்

மறைந்து போக

இளைய கலைஞன்

எழுந்தான்..

எம்ஜியாரு

ரஜினிபோல

ஏழை மனதில்

கலந்தான்..

தமிழன் தனது

பெருமை மறந்து

ஆளும் தகைமை

இழந்தான்...

நமது தலைவன்

வாகைசூட

எழுமே எங்கள்

இனந்தான்...

நாடறிந்த பலரிருந்தும்

நமக்கெனவே

இங்கே யாருமில்லை..

ஏழசனம் மாலையிட

வந்தாரய்யா

"எங்க வீட்டுப்பிள்ளை".!

தலைவா நீதான்

எங்கள் எதிர்காலம்

கோட்டை வென்று

போடு புதுக்கோலம்..

தமிழே தமிழே

எங்கள் அடையாளம்

ஒருநாள் தமிழும்

இந்த உலகாளும்...

தமிழன் பெருமை

தமிழன் உணர்ந்தால்

உலகில் உலகில்

அவன்போல் யாரு...?

எமக்குள் நாமே

சண்டைகள் செய்தால்..

தொடரும் எங்கள்

துயர் வரலாறு ..

கடந்தகாலம்

கடந்துபோச்சு

நடந்த கதைகள்

விடுவோம்..

இன்று நாங்கள்

இணைந்து நாளும்

புதியவிதைகள்

நடுவோம்

மக்கள் வாழ்வை

சுரண்டுவோரை

குப்பை மடுவில்

இடுவோம்..

மானமுள்ள

தலைவன் பின்னே

போனால் உயர்வை

தொடுவோம்..

மூன்றெழுத்தில்

எம் மூச்சிருக்கும்

அண்ணன் இன்றி

நாங்கள் இல்லை ..

வா திரண்டு

போர் தொடுப்போம்

எம்மை வெல்ல

இங்கு யாருமில்லை என உணர்ச்சி பொங்க பாடலாசிரியர் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X