Vijay birthday: விஜய் பிறந்தநாள்.. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்.. பட்டையை கிளப்பும் Cdp!
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங், டப்பிங் வேலைகள், டீ ஏஜிங்கிற்கான வேலைகள் உள்ளிட்ட அனைத்தையும் நிறைவு செய்துள்ளார் விஜய். இந்நிலையில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த விஜய் இன்றைய தினம் சென்னை திரும்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவர்களிடமும் அவர்களது சிகிச்சை குறித்து விஜய் கேட்டறிந்தார். இதனிடையே நாளை மறுநாள் விஜய் பிறந்த நாளையொட்டி தற்போது விஜய்யின் பல அவதாரங்களை கொண்ட காமன் டிபியை வெளியிட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜயின் பிறந்தநாள் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங், டப்பிங் வேலைகள் மற்றும் டீ ஏஜிங் வேலைகளையும் நிறைவு செய்துள்ள நடிகர் விஜய், வெளிநாட்டில் சில தினங்கள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார். முன்னதாக இந்த படத்தில் மகன் விஜய் கேரக்டருக்கான டீ ஏஜிங் வேலைகளை மேற்கொள்ள நடிகர் விஜய் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார். உடன் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினரும் சென்றிருந்த நிலையில் அந்த வேலைகளையும் விஜய் முடித்துக் கொடுத்துவிட்டார்.
கள்ளக்குறிச்சி சென்ற விஜய்: இந்நிலையில் இன்றைய தினம் சென்னை திரும்பியுள்ள நடிகர் விஜய் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிய முதல் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த விவகாரத்தில் முதல் குரலாகவும் விஜய் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித், கமல்ஹாசன், ஜிவி பிரகாஷ், விஷால் உள்ளிட்டவர்களும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்த கண்டனங்களை பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் விஜய் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
காப்பாற்று தலைவா: சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் என்னை காப்பாற்று தலைவா என்று விஜய்யிடம் கதறியதையும் அவரது கையைப் பிடித்து விஜய் ஆறுதல் கூறியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் மனைவியும் அவர்தான் தங்களது குடும்பத்தின் ஆதாரம் என்றும் அதனால் அவரை எப்படியாவது காப்பாற்றி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரையும் கட்டியணைத்தபடி விஜய் ஆறுதல் தெரிவித்ததையும் வீடியோக்கள் மூலம் காண முடிந்தது. இந்நிலையில் நாளை மறுதினம் நடிகர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அவரது பிறந்த நாளை மிகப் பெரிய கொண்டாட்டமாக அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் பிறந்தநாள்: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இரண்டாவது சிங்கிள் அவரது பிறந்தநாளையொட்டி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் இறுதி படமான தளபதி 69 படத்தின் அறிவிப்பும் நாளை மறுதினம் விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தின் தயாரிப்பு உள்ளிட்ட பல விஷயங்களும் நாளை மறுதினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் Cdp: இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி காமன் டிபியை தற்போது ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் கோட்டை, கொடி உள்ளிட்டவற்றில் நடிகர் விஜய்யின் பல அவதாரங்களும் காணப்படுவதை பார்க்க முடிகிறது. முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் பல்வேறு கெட்டப்புகளில் விஜய் காணப்படுகிறார். இந்த காமன் டிபி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நாளை மறுநாள் விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவரது கட்சி சார்பிலும் ரசிகர்கள் சார்பிலும் பல்வேறு விஷயங்கள் திட்டமிடப்பட்டு உள்ளது குறிபிபடத்தக்கது. இதனிடையே கள்ளக்குறிச்சி சம்பவத்தையொட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தை விஜய் தவிர்க்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











