விலை உயர்ந்த சொகுசு காரில் வந்த விஜய்..இணையத்தில் வேகமாய் பரவும் வீடியோ!
சென்னை : நடிகர் விஜய் விலை உயர்ந்த சொகுசு காரில் வந்த வீடியோ காட்டுத்தீ போல வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தளபதி 66 என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் டைட்டில் கடந்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப சென்டிமெண்டை கதையை மையமாக வைத்து விஜய்யின் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னணி நடிகர்கள்
படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் படத்தில் பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளனர். அதிகமான நட்சத்திரங்கள் நடித்துவரும் இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படம் வெளியான பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நடிக்க உள்ளர்.

விரைவில் பாடல்
படத்தின் டைட்டில் சாங் விரைவில் வெளியிடப்படும் என்று இசையமைப்பாளர் தமன் அறிவித்துள்ளார். படத்தில் ஒன்றிரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்களை தமன் முடித்து விட்டதாகவும், இதில் விஜய் ரசிகர்களை கவரும் வகையில் செம்மயான டைட்டில் சாங் உருவாகியுள்ளதாகவும் விரைவில் அந்தப் பாடல் வெளியாகவுள்ளதாகவும் முன்னதாக தமன் கூறியிருந்தார்.
டிரெண்டாகும் வீடியோ
இந்நிலையில், நடிகர் விஜய் அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் விலை உயர்ந்த சொகுசு காரிலிருந்து இறங்கி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை விஜய்யின் ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











