TVK Vijay: கடலூரில் பிரசாரத்தை ரத்து செய்த விஜய்.. எல்லா ஏற்பாடுகளையும் செய்த காவல்துறை ஏமாற்றம்!

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் ஏப்ரல் 8ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் பிரசாரம் செய்தார். அவருக்கு அங்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் ஏப்ரல் 9ஆம் தேதி கடலூரில் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கி இருந்தனர். இப்படி இருக்கையில் இன்று தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி இருக்கையில் விஜய் பிரசாரத்திற்காக கடலூருக்கு வருகிறார் என்று பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த காவல்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் வரும் 13ஆம் தேதி விஜய் கடலூரில் பிரசாரம் செய்யவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

Actor Vijay Cancel His Cuddalore Campaign Fans Getting Upset


கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு, மஞ்சக்குப்பம், வடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. அப்படி இருக்கையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர் என்றும், அதனால் தான் விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்தார் என்றும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்றாலும், கடலூருக்கு விஜய் செல்ல, புதுச்சேரி வழியாக இல்லாமல், மாற்று வழியில் செல்ல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. அதாவது திண்டிவனம் வழியாக விக்கிரவாண்டிக்கு சென்று, அங்கிருந்து கடலூருக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அப்படி இருக்கையில் விஜய் தரப்பில் தான் பிரசாரத்தை ரத்து செய்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்ததால் அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விஜய் இதற்கு முன்னர் சென்னையில் அவரது பிரசாரத்தை ரத்து செய்திருந்தார். அதற்கு நேரக்கட்டுப்பாடு தான் காரணம் என்று அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் விஜய் பிரசாரத்தை ரத்து செய்தார் என்ற தகவலை மட்டும் தெரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் சிலர் இதற்கு காரண்ம் திமுகவும் தேர்தல் ஆணையமும், திமுகவுக்கு சாதகமான அரசு அதிகாரிகளும் தான் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X