சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்.. நீலாங்கரை வாக்குச்சாவடியில் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்களித்தார்.

Recommended Video

Rajini & Surya Family Cast Their Vote | TN Election 2021 | Oneindia Tamil

தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வெயிலுக்கு முன்பாக

வெயிலுக்கு முன்பாக


கோடை வெயில் கொளுத்துவதால் வெயிலுக்கு முன்பாக காலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அரசியல் தலைவர்களும் திரைத்துறை பிரபலங்களும் காலையிலேயே தங்களின் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

நடிகர் விஜய்..

நடிகர் விஜய்..

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், சிவக்குமார், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களுக்கான வாக்குச்சாவடிகளில் முகக்கவசம் அணிந்து காலையிலேயே வாக்களித்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

சைக்கிளில் சென்ற விஜய்

சைக்கிளில் சென்ற விஜய்

இதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்றார் நடிகர் விஜய். முகக் கவசம் அணிந்து தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.

வாக்களித்த வீடியோ

நடிகர் விஜய் சைக்கிளில் சென்றதை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் சைக்கிளில் சென்ற வீடியோவும் வாக்குச் சாவடியில் வாக்களித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X