Don't Miss!
- Technology
அடுத்த ஆப்பு.. அதிக காசு கொடுத்தால் அதிக நன்மை! Elon Musk ஓபன்! ஷாக் ஆன ட்விட்டர் பயனர்கள்!
- Automobiles
ஏன்ய்யா... கார்கள் இறக்குமதிக்கு இவ்ளோ பணம் செலவு பண்றீங்க!! பாகிஸ்தானில் பொருளாதாரம் சரியாகாது போலயே!!
- Education
SSC MTS Recruitment Notification 2023:11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு அழைப்பு...!
- News
ஆஆ.. இது வேற நடக்குதா.. ஒரே வார்த்தையில் அதிர செய்த "சொமேட்டோ" ஊழியர்.. அந்த CEO-வே ஆடிப்போயிட்டாராமே
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
வாரிசு சக்சஸ் மீட்…படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்!
சென்னை : வாரிசு படத்தின் வெற்றியை நடிகர் விஜய் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
தளபதி விஜய்யின் 66வது படத்திற்கு தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரசுடு என்றும் பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கினார். தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைத்து இருந்தார்.
இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஷியாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, எஸ்.ஜே. சூர்யா என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
அந்த
210
கோடி
புருடாவை
மட்டும்
மன்னிக்கவே
முடியாது..
வாரிசு
வசூலை
விளாசிய
ப்ளூ
சட்டை
மாறன்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பீஸ்ட் திரைப்படம் வெளியானது, நெல்சன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், 'ரா'உளவுப் பிரிவு ஏஜென்ட் விஜய் நடித்திருந்தார். ஒரு மாலினை தீவிரவாதிகள் குழு ஹைஜாக் செய்து, பொதுமக்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்ள, அவர்களை பல அகாஜூக வேலை செய்து விஜய் மீட்கிறார். இந்த படம் வசூலை பெற்றபோதும், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி விஜய்யை வெச்சி செய்தார்கள் நெட்டிசன்ஸ்.

மனம் தொட்ட வாரிசு
இதனால், அடுத்த படத்தின் கதையின் மீது கவனமாக இருந்த விஜய் பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப செண்டிமென்ட் கதையில் நடித்துள்ளார். இந்த கதை ஏற்கனவே நமக்கு தெரிந்தகதையாக இருந்தாலும், விஜய்யின் புதுவிதமான பாடி லாங்குவேஜ், காதல், ரொமான்ஸ், செண்டிமென்ட் காட்சிகள் இருந்தால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ரஞ்சிதமே பாடலுக்கு திரையரங்கே அதிர்ந்தது எனலாம்.

ரூ.210 கோடி வசூல்
ஜனவரி 11ந் தேதி வெளியான வாரிசு திரைப்படம் வெளியான 7 நாட்களில் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக தமிழக விநியோகஸ்தர் லலித் தெரிவித்து இருந்தார். பொங்கல் விடுமுறை முடிந்ததை அடுத்து,திரையங்கில் கூட்டம் குறைவாக இருந்தது.நேற்றும் இன்றும் விடுமுறை என்பதால், வாரிசு படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வாரிசு சக்சஸ் மீட்
இந்நிலையில், வாரிசு திரைப்படம் வெளியாகி நேற்றோடு 10 நாட்களான நிலையில், வாரிசு திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற சக்சஸ் பார்ட்டியில், நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், நடிகர் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் படக்குழுவினருக்கு விஜய் கேக் ஊட்டிவிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.