Actor Vijay: அது மட்டும் இல்லன்னா மீண்டும் கோட் கூட்டணி.. படத்தை பார்த்துவிட்டு விஜய் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் கூட்டணியில் கோட் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநாடு படத்திலும் சயின்ஸ் பிக்ஷனை அடிப்படையாக வைத்து வெங்கட் பிரபு வெற்றி படமாக கொடுத்திருந்தார்.

மீண்டும் இதே ஜானரில் தற்போது கோட் படத்தையும் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். இன்னும் ஒரே மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள கோட் படத்தை தற்போது விஜய் முழுவதுமாக பார்த்து முடித்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு கலக்கிட்ட என்று வெங்கட் பிரபுவிற்கு அவர் பாராட்டு தெரிவித்ததாக படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Vijay GOAT movie Venkat prabhu

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ரிலீசாக இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை இயக்குனர் வெங்கட் பிரபு முடுக்கி விட்டுள்ளார். விஜய் அப்பா -மகன் என இருவேறு ரோல்களில் நடித்துள்ள இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் சென்னை, கேரளா, ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

3 பாடல்கள் ரிலீஸ்: படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக வெள்ளிவிழா நாயகன் மோகன் நடித்துள்ளார். படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதனால் கோட் படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ளது. யுவன் இசையில் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

படத்தை பார்த்த விஜய்: இந்நிலையில் தற்போது இந்த படத்தை நடிகர் விஜய் பார்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை பார்த்துவிட்டு விஜய் மிகவும் உற்சாகமடைந்ததாகவும் கலக்கிட்ட என்று வெங்கட் பிரபுவிடம் பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவசரப்பட்டு சினிமாவில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டதாகவும் இப்படி ஒரு படம் கொடுப்பாய் என்று நினைத்திருந்தால் அவருடன் இணைந்து மேலும் ஒரு படத்தில் நடித்திருக்கலாம் என்றும் விஜய் பாராட்டியதாக படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படம் குறித்த நடிகர் விஜய்யின் இந்த கமெண்ட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.

தளபதி 69 படம்: தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கியுள்ள விஜய், கோட் மற்றும் தளபதி 69 படங்களுடன் தான் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். கோட் படத்தை முற்றிலும் நிறைவு செய்துள்ள விஜய், அடுத்ததாக தளபதி 69 படத்தையும் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும் மமிதா பைஜு இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X