பீஸ்ட் ஷூட்டிங்கை முடித்த விஜய்... வேறலெவல் அப்டேட் இதோ!
சென்னை : நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முற்றிலும் ஆக்சன் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு ஜார்ஜியா,சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னிலை வகித்து
நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்திய அளவில் வசூல் சாதனையை செய்து முன்னிலை வகித்து வருகிறது. மேலும் 2021ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முன்னிலையிலும் விஜய் தான் உள்ளார். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஆக்சன் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

சிவகார்த்திகேயன் ஓபனிங் பாடலை
கடந்த 3 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் விஜய்க்கு ஓபனிங் பாடலை எழுதி இருக்கிறார் என கூறப்படுகிறது.

கையில் துப்பாக்கியுடன்
மேலும் செல்வராகவன் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃப்ரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் இரண்டு விதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி பட்டையை கிளப்பியது. அதில் விஜய் கையில் துப்பாக்கியுடன் செம மாஸாகவும் ஸ்டைலாகவும் இருக்க அந்த போஸ்டர்கள் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றன.
Recommended Video

விஜய் பீஸ்ட் ஷூட்டிங்கை முடித்துவிட்டார்
இந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் டீசரை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க புத்தாண்டு ஸ்பெஷலாக டிசம்பர் 31ஆம் தேதி டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மற்றுமொரு சூடான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது விஜய் இப்படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து முடித்துவிட்டு டப்பிங் பணிகளையும் முடித்து விட்டதாகவும் தயாரிப்பு பணிகள் மட்டுமே மீதம் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படம் சம்மரை குறிவைத்து ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











